அன்புமடல் - ஜனவரி 18 (திங்கக்கிழமை) இரக்கமும் சினமும் ஆண்டவரிடம் உள்ளன. அவர் மன்னிப்பதில் வல்லவர். தம் சினத்தைக் காட்டுவதிலும் வல்லவர். அவரின் இரக்கம் பெரிது. அவரது தண்டணை கடுமையானது. அவரவர் செயல்களுக்கு ஏற்ப அவர் மனிதருக்குத் தீர்ப்பளிக்கிறார். சீராக் 16:11-12 செபம் பேரிரக்கமும், மாறாத அன்பும் கொண்ட எங்கள் அன்பு தெய்வமே உம்மை நன்றியோடு போற்றி துதித்து ஆராதித்து மகிழ்கின்றோம். ஒவ்வொரு புதிய நாளும் உமது இரக்கத்தின் கொடை ஐயா. உமது மேலான நலன்களால் இன்று எங்களை நிரப்பிக் கொண்டிருக்கும் உமக்கு எம்முடைய இதயம் நிறைந்த நன்றிகள். பயமும் பதட்டமும் நோய்களும் பீதிகளும் எங்களை தொற்றிக் கொண்டிருக்கும் வேளையில் எமக்கு அமைதியும் நம்பிக்கையும் தருகின்றவரே. உமது இரக்கம் உமது நீதியைவிட மகப் பெரிது. நாங்கள் நீதியின்படி தண்டனைக்கு உரியவர்களாயினும் உமது பேரன்பு எங்களை மீட்டுக்கொள்கின்றது, எங்களை வாழவைக்கின்றது. அதற்காய் உமக்கு நன்றி செலுத்துகின்றோம். எங்களது வாழ்நாளெல்லாம் உமது அருள்நலம் புடைசூழ்ந்து வர உம்தாள் பணிந்து வேண்டுகின்றோம். தொழுநோயால் பாதிப்புக்குள்ளான சிரியா நாட்டு நாமான் தேவமனிதன் எலிசாவைச் சந்தித்து (2 அர 5:7-15) அவர் சொல்படி நலம்பெற்றான். தேவனுடைய வல்லமையை உணர்ந்தவனாய் இஸ்ராயேல் தெய்வத்தைவிட வல்லமையுள்ள தெய்வம் வேறுஎங்கிலும் இல்லை என்று சான்று பகர்ந்தான். ஆண்டவரே அந்த நாமானைப்போல உமது ஆற்றலில் நம்பிக்கைவைத்து உம்மிடம் சரணாகதி அடைய அருள்தாரும். உமது அன்பும் இரக்கமும் இன்று எங்களையும், எங்கள் குடும்பங்களையும், பயத்தினாலும் பீதியினாலும் ஆட்கொள்ளப்பட்ட அனைத்து மக்களையும் விடுவித்து, நலம்பயக்கும் நம்பிக்கை விதைகளை மனதிலே விதைக்க அருள்தாரும். உலகத்தின் குரல்கள் நம்மை அச்சுறுத்தும் வேளையில் உமது குரலால் எங்களை தற்காத்துக்கொள்ள அருள்தாரும். ஆமென். Follow Us: Facebook : Theadal Media Youtube : Theadal Media Instagram : Theadal Media Twitter : Theadal Media For Contact: [email protected] #TheadalMedia #Anbumadal #DailyPrayer #FrJohnKennedy #FrVictorArmstrong #ThedalMedia #Prayer #WordofGod #BibleReflection #Bible #BibleMessage