அன்புமடல் # 401 - மே 6 (வியாழக்கிழமை) என் மகிழ்ச்சி உங்களுள் இருக்கவும் உங்கள் மகிழ்ச்சி நிறைவு பெறவுமே இவற்றை உங்களிடம் சொன்னேன். யோவான் 15:11 செபம் எங்கள் மகிழ்ச்சியின் காரணரே எம் இறைவா உம்மை நன்றியோடு போற்றி துதித்து ஆராதித்து மகிழ்கின்றோம். ஆண்டவரரோடு இணைந்து மகிழ்வதே நம்முடைய வலிமை என்பதை இஸ்ராயேல் மக்களுக்குக் கற்றுக்கொடுத்தவரே, உம்மிலேதான் எங்களுடைய வாழ்வின் இனிமை, நிறைவு, மகிழ்வு இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள ஆற்றல்தாரும். ஆயிரம் ஆண்டுகள் வேற்றிடங்களில் வாழுவதைவிட உம் பிரசன்னத்தில் குடியிருக்கும் ஒருநாள் மேலானது என்ற சத்தியத்தை உணர்ந்து கொள்ள எமது ஆன்மீகக் கண்களுக்கு வெளிச்சத்தைத்தாரும். மகிழ்ச்சியை வெளியிலே இருக்கும் பணத்தில், பொருட்களில், உணவுகளில், உறவுகளில் தேடி சோர்ந்துபோகாமல், வெறுப்படையாமல் உமது பிரசன்னத்தில் ஜெபத்தில் இணைந்திருக்கும் நேரத்தில் நெஞ்சத்தில் ஊற்றெடுக்கும் உன்னதமான உணர்வே உண்மையான மகிழ்வு என்பதைக் கண்டுகொள்ள ஆற்றல்தாரும். உலகத்தின் கவலைகளால், தேவைகளால் எங்கள் மகிழ்வை இழந்துபோகாமல், இன்று உம்மிலே மகிழ்ந்திருக்க உம்பாதம் வந்திருக்கும் எங்களை கண்ணோக்கிப்பாரும். ஆண்டவரிலே மகிழ்ச்சி கொள் உன் உள்ளத்து விருப்பங்களை நிறைவேற்றித்தருவார் என்று தாவீது ராஜா உரைப்பதைப்போல உம்மிலே மகிழ்ந்து நிற்கும் எங்களின் உள்ளத்தேவைகளையெல்லாம் நிறைவேற்ற இன்று திருவுளம் கொள்வதற்காக உமக்கு நன்றி செலுத்துகின்றேன். உமது மகிழ்ச்சி எங்களில் நிறைவாய் இருப்பதால் எம்மைக் காணும் எல்லோருக்கும் இன்று உமது மகிழ்வின் செய்திகளை அவர்களுக்கு அறிவித்து அவர்களுக்கும் மகிழ்வைக் கொடுக்க வரம்தாரும். ஆமென். Follow Us: Facebook : Theadal Media YouTube : Theadal Media Instagram : Theadal Media Twitter : Theadal Media For Contact: [email protected] #TheadalMedia #Anbumadal #DailyPrayer #FrJohnKennedy #FrVictorArmstrong #ThedalMedia #Prayer #WordofGod #BibleReflection #Bible #BibleMessage