அன்புமடல் #27 | Anbumadal | Daily Prayer | Fr John Kennedy | Promise | Word of God | Theadal Media

அன்புமடல் #27 | Anbumadal | Daily Prayer | Fr John Kennedy | Promise | Word of God | Theadal Media

அன்புமடல் - ஏப்ரல் 27 (திங்கள்கிழமை) வானத்திலிருந்து சாத்தான் மின்னலைப்போல விழக் கண்டேன். பாம்புகளையும், தேள்களையும் மிதிக்கவும், பகைவரின் வல்லமை அனைத்தையும் வெல்லவும் உங்களுக்கு அதிகாரம் கொடுத்திருக்கின்றேன். உங்களுக்கு எதுவுமே தீங்கு விளைவிக்காது. லூக்கா 10:18-19 செபம் எங்கள் ஆற்றலும், வலிமையும், கோட்டையுமான எங்கள் அன்பு இறைவா உம்மை நன்றியோடு ஆராதிக்கின்றோம், துதிக்கின்றோம், மாட்சியும் மகத்துவமும் உமக்கே உரித்தாகுக. இந்த உலகத்தின் தீய சக்திகள் மீது அதிகாரம் கொடுத்து வல்லமையோடு வாழ அழைத்தவரே உமக்கு கோடி நன்றி ஐயா. உமது நாமத்தைச் சொல்லி செபிக்கின்ற போது எங்களுக்காக விண்ணகம் திறக்கப்படுகின்றது, விண்ணகத்தின் மகிமை எங்களை மூடிக்கொள்கின்றது அதனால் தீய சக்திகள் எங்களைவிட்டு ஓடிப் போகின்றது, எங்கள் நோய்கள் விலகிப்போகின்றது, எங்களுடைய வறுமை, தரித்திரம் காணாமல் போகின்றது. உமது வியத்தகு மகிமையின் நாமம் போற்றப்பெருவதாக. உம் நாமம் என்னுடைய நாவில் ஒலிக்கும் போதெல்லாம் என் மனதில் சொல்லமுடியாத ஆனந்தம் ஊற்றெடுக்கின்றது, என் உடலில் சக்தி பெருகுகின்றது, உள்ளத்தில் உலகம் தரமுடியாத சமாதானம் கிடைக்கின்றது அத்தகைய விலைமதிப்பில்லாத மகத்துவ நாமம் புகழப்படுவதாக. சாத்தானுடைய தந்திரங்கள், சோதனைகள், வேதனைகள் எங்களை கவலைகளிலும், கண்ணீர்களிலும் ஆழ்த்திவிடாமல் நீர் எங்களுக்குக் கொடுத்திருக்கும் விசுவாசம், தேவ ஸ்நேகம், இறைவார்த்தை என்ற ஆயுதங்கள் தரும் அதிகாரத்தால் சாத்தானுக்கு கட்டளையிட்டுக் கட்டிப்போட என்னுடைய நம்பிக்கைளை மிகுதியாக்கும். நான் சாதாரண மனிதன் அல்ல, வெந்ததைத்தின்று விதிவந்தால் சாவதற்காக படைக்கப்பட்டவன் அல்ல மாறாக நான், விண்ணையும் மண்ணையும் உண்டாக்கிய தேவனுடைய சுவிகாரப் பிள்ளை, உமது பரிசுத்த இரத்தத்தினால் விலைகொடுத்து மீட்கப்பட்டவன், தேவனுடைய இராட்சியத்திற்கு சொந்தமானவன், இராஜாதி இராஜாவினுடைய பிள்ளை என்ற அதிகாரத்தோடும், வல்லமையோடும் வாழ்ந்து இந்த உலகத்திற்கு கடவுளை காண்பிப்பதற்காக அனுப்பப்பட்ட இறைத்தூதன் என்பதை ஒவ்வொருநாளும் உணர்ந்து பிரச்சனைகளுக்கு பிரச்சனைகொடுக்கும் மனிதானாக வாழ எனக்கு அருள்தாரும். இந்த உலகம் என்னை ஜெயித்துவிட அனுமதிக்காமல் உமது நாமத்தில் இந்த உலகத்தைச் செயிக்க ஆற்றல்தாரும். ஆமென் Follow Us: Facebook : Theadal Media Youtube : Theadal Media Instagram : Theadal Media Twitter : Theadal Media For Contact: [email protected] #TheadalMedia #Anbumadal #DailyPrayer #FrJohnKennedy #FrVictorArmstrong #ThedalMedia #Prayer #WordofGod #BibleReflection #Bible #BibleMessage