திருவாசகம் : 38. திருவேசறவு - பாடல் : தவத்திரு. சிவாக்கர தேசிகர் சுவாமிகள்.

திருவாசகம் : 38. திருவேசறவு - பாடல் : தவத்திரு. சிவாக்கர தேசிகர் சுவாமிகள்.

நமச்சிவாய வாழ்க. சுட்டறிவு ஒழித்தல் : ஏசறவு - நாணம். தமது சிறுமை கருதாது தமக்கு அருள் புரிந்த இறைவனது கருணையின் பெருமையை அப்பொழுது உணரா தொழிந்த தம் சிறுமையைக் கருதி வெள்கிப் பாடுதலின், இப்பகுதி, "திருஏசறவு" எனப்பட்டது.  சிறுமையாவது ஏகதேசக் காட்சியால் உலக வயப்பட்டு மயங்குதலே யாகலின், அந்நிலைக்கு வெடாகிப் பாடும் இதற்கு, "சுட்டறிவு ஒழித்தல்"எனக் குறிப்பு உரைத்தனர். திருச்சிற்றம்பலம் 🌹