நமச்சிவாய வாழ்க : சிவவிளைவு: சென்னி - தலை, சிவபெருமான் குருவாகி வந்து அடிகள் தம் முடி மேல் தனது திருவடிகளைச் சூட்டி அருள, அத்திருவடிகளைத் தாம் என்றும் அகலாது புனைந்து நிற்கும் நிலையினை அருளிச் செய்த பத்துப் பாடல்களின் தொகுதி இது. திருவடிப் பேறே சிவப்பேறு ஆதலின், இதற்கு, "சிவவிளைவு" எனக் குறிப்புரைத்தனர். இத்திருப்பதிகம் திருப்பெருந்துறையில் அருளிச் செய்யப்பட்டது. திருச்சிற்றம்பலம் 🌹