prawn fried rice//இறால் ஃபிரைடு ரைஸ்//Shrimp fried Rice recipe//இறால் சாதம்//@spicy food lover

prawn fried rice//இறால் ஃபிரைடு ரைஸ்//Shrimp fried Rice recipe//இறால் சாதம்//@spicy food lover

#prawnfriedrice #shrimpfriedrice #இறால்சாதம் ஒரு கிலோ இறாலை சுத்தம் செய்து அதில் 1/2 ஸ்பூன் உப்பு 1/4 கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன் காஷ்மீர் ரெட் சில்லி பவுடர் 1 ஸ்பூன் சேர்த்து நன்றாக பிசைந்து 1/2 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய பின் இறாலை எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து கொள்ளவும். 6 முட்டைகளை உடைத்து வறுத்து எடுத்து கொள்ளவும். கேரட், பீன்ஸ், முட்டை கோஸ், குடைமிளகாய் ஆகியவைகளை தலா ஒரு கப் பொடியாக நறுக்கி கொள்ளவும். இஞ்சி, பூண்டு ஒரு ஸ்பூன் அளவு பொடியாக நறுக்கி கொள்ளவும். அடுப்பில் கடாய் வைத்து சூடானதும் அதில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் நறுக்கிய இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும் பிறகு நறுக்கிய கேரட், பீன்ஸ், முட்டை கோஸ், குடைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும் சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கவும் பிறகு சில்லி சாஸ் 1 ஸ்பூன், சோயா சாஸ் 1 ஸ்பூன் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும் பிறகு வறுத்து வைத்துள்ள முட்டையை சேர்த்து நன்றாக வதக்கவும் பிறகு பொரித்து வைத்துள்ள இறாலை சேர்த்து வதக்கவும் பிறகு வடித்து ஆற வைத்த சாதம் சேர்த்து நன்றாக கிளறி விடவும் சாதத்திற்கு தேவையான அளவு உப்பு 1/2 ஸ்பூன் சேர்த்து நன்றாக கிளறி விடவும் பிறகு மிளகு பொடி 1/2 ஸ்பூன், கொத்தமல்லி தழை ஒரு கைப்பிடி அளவு தூவி கிளறி விட்டு இறக்கவும். தேவையான பொருட்கள்; இறால் - 1 கிலோ முட்டை - 6 கேரட் - 2 பீன்ஸ் - 15 முட்டை கோஸ் - 100 கிராம் குடைமிளகாய் - 1 இஞ்சி - 1 துண்டு பூண்டு - 10 பல் சில்லி சாஸ் - 1 ஸ்பூன் சோயா சாஸ் ‌- 1/2 ஸ்பூன் எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு காஷ்மீரீ சில்லி பவுடர் - 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன் மஞ்சள் தூள் - 1/4 கால் டீஸ்பூன் மிளகாய்த்தூள் - 1/2 ஸ்பூன் கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி