ஹப்புத்தளை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய பிரிவுக்குட்பட்ட 16 மற்றும் 19 வயது உடைய மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி செலுத்தம் நிகழ்வு ஹப்புத்தளை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய பிரிவில் நடைபெறுகின்றது. இன்று காலை எட்டு மணிக்கு ஆரம்பமான தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் கடந்த நாட்களில் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியாமல் போன மாணவர்களுக்கு இன்று செலுத்தப்பட்டது. இந்த தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்காக அதிகளவிலான மாணவர்களின் வருகையையும் காணக்கூடியதாக இருந்தது. குறித்த பகுதியில் உள்ள பாடசாலை மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளை உடனடியாக ஆரம்பிப்பதற்கு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் இந்த தடுப்பூசி திட்டத்தினை ஹப்புத்தளை பிரதேசத்துக்கு உட்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி 5 பேர்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி தடுப்பூசிகளை சுமார் 342 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கும் சுகாதார வைத்தியர் மற்றும் குடும்ப நல அதிகாரிகள்ளுக்கும் செலுத்தியமை குறிப்பிடத்தக்கது