Music , lyrics and vocal ... Amalwin Gerarrd. song lyrics in Tamil... மண்ணில் கோதுமை மணி விழுந்து மடிந்தால் தானே பலனளிக்கும் இயேசு நம்மை மீட்க வந்தார் அதற்கு சிலுவை சுமந்து சென்றார்-2 உலகமே உலகமே சிலுவையை பாராயோ உலகமே உலகமே பாவத்தை விட்டு சென்றுவிடு-2 1 கிறிஸ்துவை சிலுவையில் அறையும் என்றோம் இடியணக் கூக்குரல் எழுப்பி நின்றோம்-2 மன்னிப்பாயா என்னை மன்னிப்பாயா இயேசுவே என்னை மன்னிப்பாயா-2 உலகமே...... 2 தந்தையின் திருவுளம் நிறைவுரவே நம் பாவ சிலுவை சுமந்தாரே. -2 மன்னிப்பாயா..... 3 நாம் செய்யும் பாவம் கூடியதால் இறைமகன் தரையில் விழுந்தாரே-2 மன்னிப்பாயா.... 4. மகனின் வாழ்வினில் துன்பம் கண்டு துவளாத நெஞ்சமில்லை கலங்காத அன்னை இல்லை-2 மன்னிப்பாயா..... 5. சீமோனும் இணைந்தார் துன்பத்திலே சிலுவையை சுமந்து உதவினாரே -2 மன்னிப்பாயா.... 6. இறைமகன் துயரத்தால் வருவதை கண்டு வெரோணிக்கா துணிந்து சென்றாளே-2 மன்னிப்பாயா.... 7, ஒயந்தீர் பளுவினைச் சுமந்ததினால் சாய்ந்தீர் நிலத்தில் மறுமுறையும்-2 மன்னிப்பாயா..... 8. கண் நீர் பெருக்கிய மகளிருக்கு ஆறுதல் கூறி தொடர்ந்தாரே -2 மன்னிப்பாயா.... 9 அளவற்ற களைப்போ பெருந் துயரோ அடியற்ற மரம்போல் விழலானார்-2 மன்னிப்பாயா... 10. யாவும் இழந்து தலைகவிழ்ந்து இலட்சிய ஆடையை உடுத்தினாரே-2 மன்னிப்பாயா... 11. பாவம் ஒரு புறம் பழியோ மறுபுறம் சிலுவையில் அறைந்தனர் தீமையின் ஏவலர்-2 மன்னிப்பாயா..... 12. என் இறைவா ஏன் என்னைக் கைநெகிழ்ந்தீர் - என்று இயேசு அன்று சொன்னாரே-2 மன்னிப்பாயா.... 13. அன்னை மிகவும் மனம் நொந்து உயிரற்ற உடலை மடி சுமந்தார்-2 மன்னிப்பாயா.... 14. ஒடுங்கிய உமதுடல் பொதியப்பட்டு நீர் உயிர்த்தெழ கல்லறை திறந்ததன்று-2 மன்னிப்பாயா...... புதிய தியானப் பாடலுக்கு • Tamil Christian Song 2020 - தியான பாடல் subscribe and like it.