Tamil Way of the Cross Song|புதிய சிலுவைப்பாதை பாடல்|Fr.Jerald Benjamin|Jeyaraj|Priyadharshini.A

Tamil Way of the Cross Song|புதிய சிலுவைப்பாதை பாடல்|Fr.Jerald Benjamin|Jeyaraj|Priyadharshini.A

Tamil Way of the Cross Song Lyrics, Music & Video Making : Fr. Jerald Benjamin(+33751451320) Music Director & Singer: Jeyaraj (+91 95665 00337) Singer: Priyadharshini. A Mixing: Jeyaraj Recording Studio: Jeyaraj: Blessed Recording Studio, Tiruvannamalai Sound Engineer: M. Sundar Raj, Edison Recordings, Chennai Mastering: Ishtiaq Feroz, Thiruvallur சிலுவைப் பாதை பாடல் பல்லவி சிலுவைப்பயணம் யாருக்காக? தொடரும் பயணம் எதற்க்காக? சுமந்தேன் சுமந்தேன் உனக்காக தொடர்ந்தேன் தொடர்ந்தேன் உன்னை மீட்க நிலை 1: குற்றமே ஏதுமின்றி பழியை எற்றேனே -2 உன் குறை தீர்த்திடவே இறப்பை எற்றேனே -2 நிலை 2: சிலுவை சுமைதனையே தோளில் எற்றேனே -2 பாவக்கறைகளையே விரும்பி சுமந்தேனே -2 நிலை 3: வேதனை தாங்காமல் தரையில் விழுந்தேனே -2 நம்பிக்கைத் தளராமல் எழுந்து நடப்பேனே -2 நிலை 4: ஆறுதல் அடைந்திடவே தாயை சந்தித்தேனே -2 ஊக்கம் மனதில் கொண்டு தொடர்ந்து நடப்பேனே -2 நிலை 5: சீமோனின் உதவியினை ஆவலாய் எற்றேனே -2 பகிரும் மனதினையே உனக்கு அளித்திடவே -2 நிலை 6: முகத்தை வெரோனிக்காவைத் துடைக்க அழைத்தேனே -2 சமூகம் மறந்த பெண்ணின் மாண்பை காத்தேனே -2 நிலை 7: கால்கள் தளர்ந்திடவே மீண்டும் விழுந்தேனே -2 பாடம் கற்றுத்தரவே  மீண்டும் எழுந்தேனே -2 நிலை 8: பெண்களின் கருணையினை கண்ணீரில் கண்டேனே -2 பாவத்தை கழுவிடவே ஆறுதல் சொன்னேனே -2 நிலை 9: தடைகள் பல வரவே இடறி விழுந்தேனே -2 இடையில் நிறுத்தாமல் முயன்று செல்வேனே -2 நிலை 10: உயிரை பிரியுமுன்னே உடையை இழந்தேனே -2 உரிமை மீறியுமே அமைதி காத்தேனே -2 நிலை 11: கல்வாரி மலையினிலே ஆணிகள் எற்றேனே -2 உனது சுமைகளையே சிலுவையில் அறைந்தேனே -2 நிலை 12: நண்பருக்காய் உயிரைத் தந்தால் உயர்ந்த தியாகம் என்றேனே -2 உன்னுயிரைக் காத்திடவே என்னுயிரை அளித்தேனே -2 நிலை 13: உதிரத்தில் சுமந்த அன்னை உள்ளத்தை உடைத்தேனே -2 உயிரற்ற உடலாக மடியில் கிடந்தேனே -2 நிலை 14: வாழும் காலமெல்லாம் அனைத்தும் பகிர்ந்தேனே -2 மற்றவர் கல்லறை ஒன்றை பரிசாய் எற்றேனே -2