Lyrics: Frs Wenish SJ & Prabhu Francis SJ Music: Fr R Wenish Raj SJ Singers: Frs Wenish Raj SJ & Darwin Michael SJ Music Direction: Mr B M Lawrence & Mr Sam Lawrence Coordination: Frs A Irudaya Raj, R Wenish Raj SJ & Vasanth SJ Video Editing: Department of VisCom, Loyola College, Chennai இராகம்: சிவரஞ்சனி தாளம்: ஆதி (சதுஸ்ர நடை) ஆரோகணம் : ச ரி2 க1 ப த2 ச் அவரோகணம் : ச் த2 ப க1 ரி2 ச எனக்காகத்தானே என் இயேசுவே எனக்காகத்தானே என் இயேசுவே 1. பழிகளைச் சுமந்து பாவத்தைச் சுமந்து பாவிமுன் பரமன் நின்றதெல்லாம்… 2. சிலுவையைச் சுமந்து சிறுமையை ஏற்று தூயவன் துயரத்தில் துடித்ததெல்லாம்… 3. எங்களின் பாவம் சிலுவையின் பாரம் விழுந்து எழுந்து நடந்ததெல்லாம்… 4. கருவினில் சுமந்தவள் தெருவினில் கண்டு துயருற்று நொந்து துடித்ததெல்லாம்… 5. மாட்சியில் மனிதர்க்கு பங்கினைத் தரவே சிலுவைச் சுமையினைப் பகிர்ந்ததெல்லாம்… 6. மாதரின் துணிவைப் போற்றிட வேண்டி துணியினில் வதனம் பதித்ததெல்லாம்… 7. மனிதரில் ஏற்றத் தாழ்வினைக் கண்டு மீட்டிட மீண்டும் எழுந்ததெல்லாம்… 8. ஆதரவின்றி அழுவோர்க்கெல்லாம் கண்களைத் துடைக்கச் சொன்னதெல்லாம்… 9. தாங்கிட முடியா தளர்ந்திட்டக் கால்கள் மூன்றாம் முறையும் விழுந்ததெல்லாம்… 10. உருவமும் சாயலும் தந்திட்ட தேவன் உடையின்றி அந்தோ நிற்பதெல்லாம்… 11. நீதியும் நேர்மையும் நிலைபெறச் செய்ய சிலுவையில் தொங்க நேர்ந்ததெல்லாம்… 12. உலகின் ஒளியே உயிரின் ஊற்றே உயிரினை பரிசாய்த் தந்ததெல்லாம்… 13. உருவற்ற உடலும் உயிரற்ற உருவும் தாய் மடிமேலே இருந்ததெல்லாம்… 14. விண்ணக அரசர் மண்ணகம் வந்து மாற்றான் கல்லறை புதைந்ததெல்லாம்… #Chennai_Jesuits #WayOfTheCross #wayofthecrosssong #siluvaipaathai #christiansongs