நாகை, திருவாரூர் மாவட்டங்களில், மூன்றாவது நாளாக மக்கள் சந்திப்பு புரட்சிப் பயணம் மேற்கொண்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரனுக்கு, கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் பல்லாயிரக்கணக்கில் திரண்டு எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர். மக்கள் விரோத எடப்பாடி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, மாண்புமிகு அம்மாவின் ஆட்சியை தமிழகத்தில் உருவாக்க பேராதரவு தருமாறு திரு. டிடிவி தினகரன், பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.