Tamil New Way of the Cross Song|புதிய சிலுவைப்பாதை|Fr.Jerald Benjamin|X.Paulraj|John Bill BOISSY

Tamil New Way of the Cross Song|புதிய சிலுவைப்பாதை|Fr.Jerald Benjamin|X.Paulraj|John Bill BOISSY

Contact details : WhatsApp : +33751451320 Tamil Christian Devotional Songs New Way of the Cross song Lyrics & Music: Fr. Jerald Benjamin Music Direction: X. Paulraj Sound Engineer : M. John Nirmal Singer & Video Making : Fr. Jerald Benjamin Recording Studio : Paul X Sounds, Chennai Voice Recorded by: John Bill BOISSY, France சிலுவைப் பாதை பல்லவி சிலுவையே சிலுவையே இயேசுவின் சிலுவையே *கல்வாரிச் சிலுவையே ஓஓ-2*-2 நிலை 1 நீதிமானே தீர்ப்பு பெற்றாரே பாவி என்னை மீட்கவே -2 நிலை 2 பாரமான சிலுவை மரத்தை பரமன் தோளில் சுமந்தாரே -2 நிலை 3 தாங்க முடியா சுமையினாலே தலைவன் தரையில் விழுந்தாரே -2 நிலை 4 அன்பு அன்னையை ஆண்டவர் இயேசு சிலுவைப் பாதையில் சந்தித்தாரே -2 நிலை 5 சிமியோன் என்ற சிறந்த மனிதர் சிலுவை சுமக்க உதவினாரே -2 நிலை 6 வீரப்பெண்மணி வெரோனிக்காவும் இயேசுவின் முகத்தைத் துடைத்தாரே -2 நிலை 7 இறைவன் இயேசு சோர்ந்து மீண்டும் இரண்டாம் முறையாய் விழுந்தாரே - 2 நிலை 8 எருசலேமின் மகளிர் அழவே மாபரன் ஆறுதல் அளித்தாரே -2 நிலை 9 சுமையை சுமந்து  நிலையும் குலைந்து மூன்றாம் முறையாய் விழுந்தாரே -2 நிலை 10 உலகைப் படைத்த கடவுள் இங்கு ஆடை இழந்து நின்றாரே -2 நிலை 11 ஆணி கொண்டு நேசர் அவரை சிலுவை மரத்தில் அறைந்தாரே -2 நிலை 12 உலகின் பாவம் போக்கும் பலியாய் உத்தமர் உயிரை அளித்தாரே -2 நிலை 13 தந்தையின் அன்பை முழுதாய் தந்து தாயின் மடியில் சாய்ந்தாரே -2 நிலை 14 உயிர்ப்பு உண்டென உலகில் சொல்லவே உடலை நிலத்தில் விதைத்தாரே -2