திருவாசகம் : 19. திருத்தசாங்கம் - பாடல் : தவத்திரு சிவாக்கர தேசிகர் சுவாமிகள்.

திருவாசகம் : 19. திருத்தசாங்கம் - பாடல் : தவத்திரு சிவாக்கர தேசிகர் சுவாமிகள்.

நமச்சிவாய வாழ்க. அடிமை கொண்ட முறைமை: திருத்தசாங்கம்- அங்கு அடிகள் அவற்றை இறைவனது சிறப்புக்கள் பலவற்றிடையே தம் கூற்றாக அருளிச்செய்தார்; இங்கு அவற்றைத் தலைவி கூற்றாகத் தனியே எடுத்து அருளிச்செய்கின்றார். இதனாலே கிள்ளை விடு தூது முதலிய தூதுப்பிரபந்தங்களில் இங்ஙனம் தசாங்கங் கூறுதலும் முறைமை ஆயிற்று. இறைவனுடைய தசாங்கமாகலின், `திரு` என்னும் அடை, புணர்க்கப் பட்டது. இதுவும் தில்லையில் அருளிச்செய்யப்பட்டது என்பதே பதிப்புக்களிற் காணப்படுவது. தசாங்கம், நாட்டை ஆளும் அரசர்க்கு உரியவையாகலானும், மேலே கீர்த்தித் திருவகவலில் தசாங்கம் கூறுமிடத்து அடிகளே, "எந்தமை ஆண்ட பரிசது பகரில்" என்று அருளிச் செய்தமையானும், இதற்கு, "அடிமை கொண்ட முறைமை" எனக் குறிப்புரைத்தனர் முன்னோர். இது, முழுவதும் நேரிசை வெண்பாக்களால் ஆனது. திருச்சிற்றம்பலம் 🌹