சிவபுராண பிரார்த்தனை தொடரலை! #sivapuranam #thiruvasagam #prayersforcorona #sivalogam #covidprayers

சிவபுராண பிரார்த்தனை தொடரலை! #sivapuranam #thiruvasagam #prayersforcorona #sivalogam #covidprayers

சிவபுராண பிரார்த்தனை தொடரலை.. தினமும் காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை, ஒவ்வொரு பதினைந்து நிமிடங்களுக்கு ஒரு சிவ புண்ணிய காலமாக 48 காலங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இதில் தங்களுக்கு ஏற்றதோர் காலத்தை தேர்ந்தெடுத்துக் கொண்டு இத்தொடரலையில் இணைந்து பிரார்த்திக்கலாம். பிரார்த்தனை முறை: நெறி-01 - ஆன நீற்றுக்கவசம்: சுத்தமதாவது நீறு என்று திரு நீற்றுக்கவசம் அணிதல் வேண்டும். நெறி-02 - ஆசனம்: காற்றோட்டமான ஓரிடத்தில், தரையில், ஆசனம்/ விரிப்பு அமைத்து அமர்ந்து கொள்ளவும். நெறி-03 - பிராணாயாமம்: நிதானமாக மூன்று முறை (பிராணாயாமம்) சுவாசப் பயிற்சி மேற்கொண்டு குருவருளை தியானிக்கவும். நெறி -04 - சங்கல்பம்: எல்லாம் வல்ல நம் சிவபெருமானின் வடிவங்களில், தங்கள் மனமுவந்த நாம ரூபத்தினை எண்ணி கரம் கூப்பி, சிரம் தாழ்த்தி, மனம் விட்டு பேசி, தற்சமயம் துயரப்படும் எல்லா உயிர்களுக்காவும் மன்றாடி, வேண்டிக்கொள்ளவும். நெறி -5 சிவபுராண பிரார்த்தனை: குருநாதர் மணிவாசகர் வாக்கின் படி அறியாமையால் தவிக்கும் ஜீவன்களின் முந்தை வினை முழுதும் மோய சிந்தை மகிழ சிவபுராணத்தை ஒதவும். நமச்சிவாய வாழ்க!