அன்புமடல் - ஏப்ரல் 29 இந்த ஆறு பாயுமிடமெல்லாம் திரளான உயிரினங்கள் வாழும், அங்கு ஏராளமான மீன்கள் இருக்கும். ஏனெனில் இத்தண்ணீர் பாய்ந்து அங்குள்ள நீரை நல்ல நீராய் மாற்றும். எனவே அது பாயுமிடமெல்லாம் யாவும் உயிர்வாழும். எசேக்கியேல் 47:9 செபம் ஜீவ நதியாகிய எங்கள் அன்பின் பரலோக தந்தையே உம்மை நன்றியோடு உம்மை ஆராதித்து துதித்து மகிழ்கின்றோம். வாழ்வளிக்கும் நீரூற்றாகிய உம்மிடமிருந்து எங்கள் வாழ்வைப் பெற்றுக் கொள்கின்றோம். யாரேனும் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வரட்டும் நான் அவர்களது தாகத்தை தீர்க்க தண்ணீர் வழங்கி, அவர்களையும் பிறர் தாகம் தீர்;க்கும் ஜீவ நதியாக மாற்றுவேன் என்று வாக்குதத்தம் கொடுத்தவரே உமக்கு கோடி நன்றி அப்பா. ஜீவத் தண்ணீராகிய தூய ஆவியானவரை நாங்கள் பெற்றுக் கொள்ளும் போது நாங்களும் அவரில் ஒருவராக, அவரால் பயன்படுத்தப்படும் பாத்திரமாக மாறி பிறருக்கு வாழ்வு கொடுக்கும், சக்தி கொடுக்கும் ஆற்றலாக மாறுகின்றோம். அதனோடு கற்களும், முற்களும், புதர்களும், பாறைகளும் பாய்ந்தோடும் ஆற்றின் போக்கை நிறுத்த முடியாது எவ்வாறு அந்த ஆறு கற்களை, முற்களை தனக்குள்ளாக ஈர்த்துக்கொண்டு, தனது இலக்கை நோக்கி ஓடிக்கொண்டே இருக்கும் அதுபோல எங்களை முற்களைபோல சுட்டெரிப்பதற்காக கடவுளால் அனுமதிக்கப்பட்ட மனிதர்களை வெறுக்காமல் அவர்களையும் அன்பு செய்து வாழ அருள்தாரும். மேலும் ஆறு பாய்கின்ற இடத்திலெல்லாம் வளமையையும், தாகம் தீர்க்கும் தண்ணீரையும், வாழ்வையும் கொடுத்துச் செல்வதைப்போல நான் இருக்கின்ற இடத்திலெல்லாம் மகிழ்வையும், நம்பிக்கையும், மன்னிப்பையும் அமைதியiயும் சுமந்துசெல்லும் மனிதனாக எம்மை மாற்றும். நதியைப்போல எல்லோரையும் அரவணைத்துச் செல்லும் இயேசுவின் பிள்ளையாய் வாழ எனக்கு அருள்தாரும். ஆமென் Follow Us: Facebook : Theadal Media Youtube : Theadal Media Instagram : Theadal Media Twitter : Theadal Media For Contact: [email protected] #TheadalMedia #Anbumadal #DailyPrayer #FrJohnKennedy #FrVictorArmstrong #ThedalMedia #Prayer #WordofGod #BibleReflection #Bible #BibleMessage