வேளாளர் என்ற சமுதாய பெயரை பிற சமுதாயத்தவர்களுக்கு வழங்க தமிழக அரசு பரிந்துரை செய்ய விரும்புவதை கண்டித்து தமிழ்நாடு சைவ வேளாளர் சங்கம், மற்றும் வேளாளர் கூட்டமைப்பு சார்பில் நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நெல்லை சந்திப்பு ரயில்வே நிலையம் முன்பு நடைபெற்றது. தமிழ்நாடு சைவ வேளாளர் சங்க மாநில தலைவர் புளியரை ராஜா தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் சைவ வேளாளர் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.#nijamtvnews