இராஜசூய வேள்வி என்பது இந்து தொன்மவியல் படி, மாமன்னர்களால் அதிகப் பொருட் செலவுடன் செய்யப்படும் ஒரு வகை வேள்வி ஆகும். தான் ஒரு மாமன்னர் என்பதை மற்ற மன்னர்களுக்கு உணர்த்துவதற்காகவும், நாட்டிற்கு புதிதாக பட்டம் சூட்டிக்கொள்ளும் பொருட்டும் ஒரு மன்னரால் இராசசூய வேள்வி செய்யப்படுகிறது. ஆபஸ்தம்ப சூத்திரத்தில் இராச்சூய வேள்வி செய்முறை குறித்து விளக்கப்பட்டுள்ளது.இராசசூய வேள்வியின் போது சோம பானம் பிழிதல், சொக்கட்டான் ஆடுதல், தேர் ஓட்டுதல், வில்லிருந்து அம்பு எய்துதல், கால்நடை மந்தையை வேட்டையாடுதல் போன்ற செயல்கள் வேள்வி நடத்தும் மன்னரின் தலைமையில் நடைபெறும். Therukoothu StreetPlay RajasuyaYagam