எட்டுமாத கர்ப்பிணிக்கு எய்ட்ஸ் ரத்தம்: போலீசில் புகார்

எட்டுமாத கர்ப்பிணிக்கு எய்ட்ஸ் ரத்தம்: போலீசில் புகார்

#aids #blood bank #lady விருதுநகர் மாவட்டம் சாத்துாரைச் சேர்ந்த கூலித்தொழிலாளியின் மனைவி இரண்டாவது முறையாக கர்ப்பமானதைத் தொடர்ந்து, சாத்துார் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்து வந்துள்ளார். எட்டு மாத கர்ப்பிணியான அவருக்கு, உடலில் ரத்தம் குறைவாக இருப்பதாக, டாக்டர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து சாத்துாரில் உள்ள அரசு ரத்த வங்கியில் இருந்து ரத்தம் ஏற்றப்பட்டுள்ளது. இந்த ரத்தத்தின் மூலம் கர்ப்பிணிக்கு எய்ட்ஸ் கிருமி பரவியுள்ளது.தனக்கு மட்டுமின்றி வயிற்றில் உள்ள குழந்தைக்கும் எய்ட்ஸ் பரவும் அபாயம் இருப்பதாக, டாக்டர்கள் தெரிவித்ததால், பாதிக்கப்பட்ட பெண், கணவருடன் சாத்துார் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் கண்ணன் விசாரணையை துவக்கியுள்ளார். For more videos Subscribe To Dinamalar: https://rb.gy/nzbvgg Facebook:   / dinamalardaily   Twitter:   / dinamalarweb   Download in Google Play: https://rb.gy/ndt8pa