திருச்சதகம் – ஆனந்தத்து அழுந்தல் Thiruvasagam Song with Tamil Lyrics | Morning Mantra MM

திருச்சதகம் – ஆனந்தத்து அழுந்தல் Thiruvasagam Song with Tamil Lyrics | Morning Mantra MM

thiruvasagam thirusadhagam திருச்சதகம் – ஆனந்தத்து அழுந்தல் paadal Thiruvasagam Song with Tamil Lyrics#thiruvasagamsongs#திருச்சதகம்ஆனந்தத்துஅழுந்தல் LYRICS: புணர்ப்ப தொக்க எந்தை என்னை யாண்டு பூண நோக்கினாய் புணர்ப்ப தன்றி தென்றபோது நின் னொ டென்னொ டென்னிதாம் புணர்ப்ப தாக அன்றி தாக அன்பு நின்க ழற்கணே புணர்ப்ப தாக அங்க ணாள புங்க மான போகமே போகம் வேண்டி வேண்டி லேன்பு ரந்த ராதி இன்பமும் ஏக நின்க ழல்லி ணைய லாதி லேனென் எம்பிரான் ஆகம் விண்டு கம்பம் வந்து குஞ்சி அஞ்ச லிக்கணே ஆக என்கை கண்கள் தாரை ஆற தாக ஐயனே ஐய நின்ன தல்ல தில்லை மற்றொர் பற்று வஞ்சனேன் பொய்க லந்த தல்ல தில்லை பொய்ம்மை யேன்என் எம்பிரான் மைக லந்த கண்ணி பங்க வந்து நின்க ழற்கணே மெய்க லந்த அன்ப ரன்பெ னக்கு மாக வேண்டுமே வேண்டும் நின்க ழற்க ணன்பு பொய்ம்மை தீர்த்து மெய்ம்மையே ஆண்டு கொண்டு நாயி னேனை ஆவ என்ற ருளுநீ பூண்டு கொண் டடிய னேனும் போற்றி போற்றி யென்றுமென்றும் மாண்டு மாண்டு வந்து வந்து மன்ன நின்வ ணங்கவே வணங்கும் நின்னை மண்ணும் விண்ணும் வேதம் நான்கும் ஓலமிட் டுணங்கு நின்னை எய்தலுற்று மற்றொ ருண்மை இன்மை யின் வணங்கி யாம்வி டேங்க ளென்ன வந்து நின்ற ருளுதற் கிணங்கு கொங்கை மங்கை பங்க என்கொ லோநினைப்பதே நினைப்ப தாக சிந்தை செல்லு மெல்லை யேய வாக்கினால் தினைத்த னையு மாவ தில்லை சொல்ல லாவ கேட்பவே அனைத் துலகு மாய நின்னை ஐம்பு லன்கள் காண்கிலா எனைத்தெ னைத்த தெப்பு றத்த தெந்தை பாத மெய்தவே எய்த லாவ தென்று நின்னை எம்பி ரான்இவ் வஞ்சனேற் குய்த லாவ துன்க ணன்றி மற்றொ ருண்மை யின்மையின் பைத லாவ தென்று பாது காத்தி ரங்கு பாவியேற் கீத லாது நின்க ணொன்றும் வண்ண மில்லை யீசனே ஈச னேநீ அல்ல தில்லை இங்கும் அங்கும் என்பதும் பேசி னேனொர் பேத மின்மை பேதை யேனென் எம்பிரான் நீச னேனை ஆண்டு கொண்ட நின்ம லாஓர் நின்னலால் தேச னேஓர் தேவ ருண்மை சிந்தி யாது சிந்தையே சிந்தை செய்கை கேள்வி வாக்குச் சீரில் ஐம்பு லன்களான் முந்தை யான காலம் நின்னை எய்தி டாத மூர்க்கனேன் வெந்தை யாவி ழுந்தி லேனென் உள்ளம் வெள்கி விண்டிலேன் எந்தை யாய நின்னை இன்னம் எய்த லுற்றி ருப்பனே இருப்பு நெஞ்ச வஞ்ச னேனை ஆண்டு கொண்ட நின்னதாட் கருப்பு மட்டு வாய்ம டுத்தெ னைக்க லந்து போகவும் நெருப்பு முண்டு யானு முண்டி ருந்த துண்ட தாயினும் விருப்பு முண்டு நின்கண் என்கண் என்ப தென்ன விச்சையே