திருவெள்ளறை பெருமாள் தாயார் ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றுக்கு எழுந்தருளல்

திருவெள்ளறை பெருமாள் தாயார் ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றுக்கு எழுந்தருளல்

திருவெள்ளறையிலிருந்து ஸ்ரீரங்கம் கொள்ளிடக்கரை வரை (சுமார் 17 கிலோ மீட்டர்) ஸ்ரீசெந்தாமரைக் கண்ணன் பெருமாளையும், பங்கஜகவல்லி தாயாரையும் இரு தனித்தனி பல்லக்கில் எழுந்தருள பண்ணி, கைங்கரியபரர்ங்கள் பனியிலும் வெயிலிலும் (மேல் சட்டை அணியாமல்) கல்லிலும், முள்ளிலும் ஆற்றுக்கரை, மேட்டிலும் (காலணி இல்லாமல்) ஏழை பண்ணி (சுமந்து வந்து) கொள்ளிடம் ஆற்றை கடந்து ஸ்ரீரங்கம் வடகரையில் ஸ்ரீ பெருமாளையும், தாயாரையும் எழுந்தருளப் பண்ணுகின்றனர். பெருமாளும் தாயாரும் ஆற்றைக் கடந்து வரும் முழுநிகழ்வை முழுவதுமாக கவரேஜ் செய்து, 15 நிமிட வீடியோவை 1.24 விரைவு ஓட்ட வீடியோவாக பதிவு செய்துள்ளோம் 👇 திருவெள்ளறை பங்குனி பிரம்மோற்சவத்தின் நான்காவது நாளான இன்று 12.03.23 ஞாயிறு ஸ்ரீ பங்கஜ வள்ளி தாயார் சமேத செந்தாமரை கண்ணன் காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை பக்தர்களுக்கு சேவை சாதித்து பின் இரவு திருவள்ளறை திரும்புவார்.