திருமங்கையாழ்வார் அருளிய பெரிய திருமொழி முதற்பத்து 1 - ஆம் திருமொழி பெரிய திருமந்திரத்தின் பெருமை சேமமே வேண்டி தீவினை பெருக்கி* தெரிவைமார் உருவமே மருவி* ஊமனார் கண்ட கனவிலும் பழுது ஆய்* ஒழிந்தன கழிந்த அந் நாள்கள்* காமனார் தாதை நம்முடை அடிகள்* தம் அடைந்தார் மனத்து இருப்பார்* நாமம் நான் உய்ய நான் கண்டுகொண்டேன்* நாராயணா என்னும் நாமம். பதவுரை தீ வினை பெருக்கி - துஷ்கருமங்களை அதிகமாகச் செய்து தெரிவைமார் உருவமே மருவி - ஸ்திரீகளுடைய வடிவழகையே பேணி கழிந்த அந்நாள்கள் - கீழே கழிந்த நாள்களானவை ஊமனார் கண்ட கனவிலும் பழுது ஆய் ஒழிந்தன - ஊமை கண்ட கனவிலுங் காட்டில் வீணாகக் கழிந்து போயின; காமனார் தாதை - மன்மதனுக்குப் பிதாவும் விளக்க உரை English Translation Father-of-Kama, our Lord the great one, -- lives in the heart of devotees. I found his Mantra, path of redemption, Narayana is the good name. Seeking my well-being, through countless misdeeds, I sought the shapely WOMEN then. Lost are the good days, spent in this manner, more useless than dreams-of-dumb-ones. பொருள்: நன்மையே பெற வேண்டும் என்று எண்ணி அதனைப் பெற நல் வினை செய்யாமல் தீவினையே செய்து பெண்களின் அழகையே நாடிக் கழித்த நாட்கள் ஊமை கண்ட கனவினைப் போல வீணாயின. நாராயணா என்னும் நாமத்தின் சிறப்பை எப்படிக் கண்டுகொண்டார் என்பதை திருமங்கை ஆழ்வார் விளக்கும் விதமே தனி அழகு! அவர் சொல்லுவதை பெரிய திருமொழியில் படித்து ரசிக்க வேண்டும்.