Thiruvembavai Thiruvasagam ( திருவெம்பாவை திருவாசகம்)

Thiruvembavai Thiruvasagam ( திருவெம்பாவை திருவாசகம்)

திருஎம்பாவை   `ஆதியும் அந்தமும் இல்லா அரும் பெரும் சோதியை யாம் பாடக் கேட்டேயும், வாள் தடம் கண் மாதே! வளருதியோ? வன் செவியோ நின் செவி தான்? மா தேவன் வார் கழல்கள் வாழ்த்திய வாழ்த்து ஒலி போய் வீதிவாய்க் கேட்டலுமே, விம்மி விம்மி, மெய்ம்மறந்து, போது ஆர் அமளியின்மேல் நின்றும் புரண்டு, இங்ஙன் ஏதேனும் ஆகாள், கிடந்தாள்; என்னே! என்னே! ஈதே எம் தோழி பரிசு?' ஏல் ஓர் எம்பாவாய்!