Album - Unakkana Neram Varum Song - Unakkana Neram Music Composed,Programmed & Arranged by - Mohanram Lyrics - Thozhan Singers - SJK , Super Singer Priyanka Rhythm Programme - Derrick Electric,Acoustic & Bass Guitars - Richard Paul Mix & Master - Kingsley Sam Cinematographer - M.Oliver Deny Editor - Vithu Jeeva Designer - Gipson Recorded at - 2 Keys Studio,Chennai Recording Engineer - Raj Studio Assistant - Jagan English Subtitle - M.Jaishree Special Thanks to - Thozhan Lyricist Banner - Youtube Citizen Produced by - Kajeenthiran Released by - Busy Music World Lyrics ---------- உனக்கான நேரம் வரும் பொறுத்திரு மனமே மனமே வரும் அந்தக் காலம் வரை உழைத்திரு மனமே மனமே நாளையே உன் நிலைமை மாறும் வாழ்விலே இன்பம் சேரும் சூழ்நிலை அது சாதகமானால் யாவுமே நல்லவை ஆகும் மனமே ஓ மனமே மனம் எல்லாம் பூ மணமே மனமே வா மனமே வழி எல்லாம் பூ வனமே * எதிர்காலம் மாறும் என்றே நீ அட சும்மா இருக்கக் கூடாது இதை நாளை பார்ப்போம் என்றே நீ வெறும் நாளைக் கடத்தக் கூடாது இவை எல்லாம் தலைவிதி என்றே நீ ஒரு போதும் நினைக்கக் கூடாது விடு நடப்பது நடக்கும் என்றே நீ ஒரு மூலையில் கிடக்கக் கூடாது நீ பிறந்தபோது உந்தன் முயற்சி ஏதுமின்றி நீயும் பிறக்கவில்லையே நீ வாழும்போதும் உந்தன் முயற்சி ஏதுமின்றி வெற்றி கிடைப்பதில்லையே * உன்னை நீ நம்பினால் விண்ணையும் தாண்டலாம் இன்னும் நீ எம்பினால் நிலவையும் தீண்டலாம் தோல்வியைத் தந்துதான் வெற்றியை வாங்கணும் வென்றிடும் நாள் வரை வலிகளைத் தாங்கணும் வேதனையும் உனக்குள்ளே போதனையைத் தருமே சோதனையைக் கடந்தாலே சாதனையும் வருமே என்னாலே என்னாலே முடியும் என்றே நீ சொல்வாய் மண்மேலே மண்மேலே உன் வெற்றிக் கொடியை ஏந்திச் செல்வாய் * நெஞ்சிலே பாரமா தூக்கி வை ஓரமா துணிந்து நீ இறங்கினால் வெற்றியும் தூரமா உலகமே நம்பிடும் ஒன்றை நான் சொல்லவா எண்ணம் போல் வாழ்க்கையும் அமைந்திடும் அல்லவா இலட்சியங்கள் தோற்காது நிச்சயமாய் வெல்லும் அட்சயமாய் உன் வாழ்வில் அற்புதங்கள் செய்யும் என்னாலே என்னாலே முடியும் என்றே நீ சொல்வாய் மண்மேலே மண்மேலே உன் வெற்றிக் கொடியை ஏந்திச் செல்வாய் * விடியாத இரவும் இல்லை வளராத பிறையும் இல்லை விழிப்போடு கனவு கண்டால் ஒருநாளும் கலைவதில்லை அறிவோடு நடந்து கொண்டால் தவறேதும் நடப்பதில்லை மனதோடு தெளிந்து நின்றால் தடுமாற்றங்கள் இருப்பதில்லை உனக்குள் இருக்கும் உன்னை மறைந்து கிடப்பவனை வெளியில் இழுத்துக் கொண்டு வா உன் மனதில் உறுதி கொண்டு உடலில் வீறு கொண்டு தடையைக் கடந்து வென்று வா.. To join our family ❤️ Subscribe : / busymusicworld Follow us : https://instagram.com/busymusicworld?... Follow us : / busy_musicworld Like us : / busy-music-world-105197225362002 #supersingerpriyanka #SJK #skajeenthiran #motivationalsong #motivationsongtamil #busymusicworld #tamilalbumsong #unakkananeram #motivation #tamil #youtubecitizen #albumsong #motivational #unakkananeramvarum #priyanka #motivationalsongstamil #motivationalsongtamil #tamilmotivatonalsong #bestfemalesinger #priyankasong #skajeenthiransong #tamilnewalbumsong #thozhan #kavingnarthozhan #thozhanlyrics #thozansong #thozhantamillyricist