திருப்புலம்பல் v1 | பாடல் வரிகளுடன் | மாணிக்கவாசகர் | Thiruvasagam | Manikavasakar | with lyrics

திருப்புலம்பல் v1 | பாடல் வரிகளுடன் | மாணிக்கவாசகர் | Thiruvasagam | Manikavasakar | with lyrics

திருப்புலம்பல் | பாடல் வரிகளுடன் | மாணிக்கவாசகர் | Thiruvasagam | Manikavasakar | with lyrics #திருவாசகம் #திருமுறை #மாணிக்கவாசகர் #Thiruvasagam #Thirumurai #Maanikkavaasakar திருப்புலம்பல்   அ௫ளியவர் : மாணிக்கவாசகர்   திருமுறை : எட்டாம் திருமுறை   நாடு : சோழநாடு காவிரி தென்கரை   தலம் : ஆரூர்   சிறப்பு: சிவானந்த முதிர்வு; கொச்சகக் கலிப்பா. பாடியவர்: பா. சம்பந்தம் குருக்கள் திருச்சிற்றம்பலம் பூங்கமலத் தயனொடுமால் அறியாத நெறியானே கோங்கலர்சேர் குவிமுலையாள் கூறாவெண் ணீறாடீ ஓங்கெயில்சூழ் திருவாரூர் உடையானே அடியேன்நின் பூங்கழல்கள் அவையல்லா தெவையாதும் புகழேனே.  1 சடையானே தழலாடீ தயங்குமூ விலைச்சூலப் படையானே பரஞ்சோதீ பசுபதீ மழவெள்ளை விடையானே விரிபொழில்சூழ் பெருந்துறையாய் அடியேன்நான் உடையானே உனையல்லா துறுதுணை மற் றறியேனே.  2 உற்றாரை யான்வேண்டேன் ஊர்வேண்டேன் பேர்வேண்டேன் கற்றாரை யான்வேண்டேன் கற்பனவும் இனியமையும் குற்றாலத் தமர்ந்துறையுங் கூத்தாஉன் குரைகழற்கே கற்றாவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே.  3 திருச்சிற்றம்பலம் பாடல் ஒலி, வரிகள் https://shaivam.org/ மாணிக்கவாசகர் திருவாசகம் Playlist from our channel:    • மாணிக்கவாசகர் திருவாசகம்