திருவாசகம் | Thiruvasagam | தாமோதரன் ஐயா | Siva dhamotharan | மகா சிவராத்திரி பாடல் | சிவன் பாடல்கள்

திருவாசகம் | Thiruvasagam | தாமோதரன் ஐயா | Siva dhamotharan | மகா சிவராத்திரி பாடல் | சிவன் பாடல்கள்

சிவ சிவ #ஆசைப்பத்து #திருவாசகம் #Thiruvasagam #பன்னிரு திருமுறை பதிகங்கள் #எட்டாம் திருமுறை பதிகம் #சிவ தாமோதரன் ஐயா #தாமோதரன் ஐயா #திருமுறை பதிகம் #திருசசிற்றம்பலம் #siva dhamotharan ayya thiruvasagam #sivadamotharan ayya thiruvasagam #சிவன் பாடல்கள் #devotional Lord God Shiva Sivan mahadev songs status #அண்ணாமலையார் பாடல்கள் #chitra pournami sivan whatsapp status songs #pradhosham song #பிரதோஷ பாடல்கள் #பௌர்ணமி பாடல்கள் ஆசைப்பத்து - ஆத்தும இலக்கணம் (திருப்பெருந்துறையில் அருளியது - அறுசீர்க்கழி நெடிலுடி ஆசிரிய விருத்தம்) கருடக்கொடியோன் காணமாட்டாக் கழற்சே வடியென்னும் பொருளைத் தந்திங் கென்னை யாண்ட பொல்லா மணியேயோ இருளைத் துரந்திட் டிங்கே வாவென்றங்கே கூவும் அருளைப் பெறுவான் ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. ⁠ மொய்ப்பால் நரம்பு கயிறாக மூளை என்பு தோல் போர்த்த குப்பாயம்புக் கிருக்க கில்லேன் கூவிக்கொள்ளாய் கோவேயோ எப்பா லவர்க்கும் அப்பாலாம் என்னாரமுதேயோ அப்பா காண ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. ⁠ சீவார்ந் தீமொய்த் தழுக்கொடு திரியுஞ் சிறுகுடில் இது சிதையக் கூவாய் கோவே கூத்தா காத்தாட் கொள்ளுங் குருமணியே தேவா தேவர்க் கரியானே சிவனே சிறிதென் முகநோக்கி ஆவா வென்ன ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. ⁠ மிடைந்தெலும் பூத்தை மிக்கழுக் கூறல் வீறிலி நடைக்கூடம் தொடர்ந்தெனை நலியத் துயருறு கின்றேன் சோற்றமெம்பெருமானே உடைந்துநைந் துருகி உன்னொளி நோக்கி உன்திரு மலர்ப்பாதம் அடைந்து நின்றிடுவான் ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. ⁠ அளிபுண்ணகத்துப் புறந்தோல் மூடி அடியேனுடையாக்கை புளியம் பழமொத் திருந்தேன் இருந்தும்விடையாய் பொடியாடி எளிவந்தென்னை ஆண்டுகொண்ட என்னாரமுதேயோ அளியேன் என்ன ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. ⁠ எய்த்தேன் நாயேன் இனியிங் கிருக்ககில்லேன் இவ்வாழ்க்கை வைத்தாய் வாங்காய் வானோர் அறியா மலர்ச்சே வடியானே முத்தா உன்றன் முகவொளி நோக்கி முறுவல் நகைகாண அத்தா சால ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. ⁠ பாரோர் விண்ணோர் பரவியேத்தும் பரனே பரஞ்சோதீ வாராய் வாரா வுலகந்தந்து வந்தாட்கொள்வானே பேராயிரமும் பரவித் திரிந்தெம் பெருமான் என ஏத்த ஆரா அமுதே ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே.  கையால் தொழுதுன் கழற்சே வடிகள் கழுமத் தழுவிக்கொண்டு எய்யா தென்றன்தலைமேல் வைத்தெம்பெருமான் பெருமானென்று ஐயா என்றன் வாயா லரற்றி அழல்சேர் மெழுகொப்ப ஐயாற் றரசே ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. ⁠ செடியா ராக்கைத் திறமற வீசிச் சிவபுரநகர்புக்குக் கடியார் சோதி கண்டுகொண்டென் கண்ணினை களிகூரப் படிதா னில்லாப் பரம்பரனே உன்பழஅடியார் கூட்டம் அடியேன் காண ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. ⁠ வெஞ்சேலனைய கண்ணார்தம் வெகுளிவலையில் அகப்பட்டு நைஞ்சேன் நாயேன் ஞானச் சுடரே நானோர் துணைகாணேன் பஞ்சேரடியாள் பாகத்தொருவா பவளத் திருவாயால் அஞ்சேல் என்ன ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. ⁠ 1. சிவபுராணம் – Sivapuranam 2. கீர்த்தித் திரு அகவல் – Keerthith thiruahaval 3. திருஅண்டப் பகுதி – Thiru andappahuthi 4. போற்றித் திருஅகவல் – Potrith Thiruakaval 5. திருச்சதகம் – (1) மெய் உணர்தல் – Realization of Truth 5. திருச்சதகம் – (2) அறிவுறுத்தல் – Imparting Wisdom 05 – (3). திருச்சதகம் – சுட்டறுத்தல் – Severing Attachments 5. திருச்சதகம் – (4). ஆத்தும சுத்தி – Purification of the soul 5. திருச்சதகம் – (5). கைம்மாறு கொடுத்தல் – Offering gratitude 05 – (6). திருச்சதகம் – அநுபோக சுத்தி – Purity of Experience. 5. திருச்சதகம் – (7). காருணியத்து இரங்கல் – Seeking Divine Compassion. 5. திருச்சதகம் – (8). ஆனந்தத்து அழுந்தல் – Immersing in Happiness 05 – (9). திருச்சதகம் – ஆனந்த பரவசம் – Rapturous Joy. 5. திருச்சதகம் – (10). ஆனந்தாதீதம் – Acknowledgement of Joy 06. நீத்தல் விண்ணப்பம் – Neeththal Vinnappam 07. திருவெம்பாவை – Thiruvempaavai 8. திரு அம்மானை – Thiru Ammanai 09. திருப்பொற் சுண்ணம் – Thiruppotchunnam 10. திருக்கோத்தும்பி – Thirukkoththumbi 11. திருத்தெள்ளேணம் – Thiru Thellenum 12. திருச்சாழல் – Thiruchaazhal 13. திருப்பூவல்லி – Thirupoovalli 14. திருவுந்தியர் – Thiruvunthiyar 15. திருத்தோள் நோக்கம் – Thiruththozh-Nokkam. 16. திருப்பொன்னூசல் – Thirup Ponnoosal 17. அன்னைப்பத்து – Annaippathu 18. குயிற்பத்து – Kuyil Paththu 19. திருத்தசாங்கம் – Thiru-thasaangam 20. திருப்பள்ளியெழுச்சி – Thiruppalli Ezhuchchi 21. கோயில் மூத்த திருப்பதிகம் – Koyil Mooththa Thirupathikam 22. கோயில் திருப்பதிகம் – Koyil Thiruppathikam 23. செத்திலாப்பத்து – Seththilappaththu 24. அடைக்கலப்பத்து – Adaikalap Paththu 25. ஆசைப்பத்து – Aasaip-paththu 26. அதிசயப்பத்து – Athisaya-paththu 27. புணர்ச்சிப்பத்து – Punarchip paththu 28. வாழாப்பத்து – Vaazhap paththu 29. அருட்பத்து – Arud paththu 30. திருக்கழுக்குன்றப் பதிகம் – Thiruk Kazhukundrap pathicam 31. கண்டபத்து – Kanda Paththu 32. பிரார்த்தனைப்பத்து – Praththanai paththu 33. குழைத்தபத்து – Kulaiththa paththu 34. உயிருண்ணிப்பத்து – Uyirunnip paththu 35. அச்சப்பத்து – Achchap paththu 36. திருப்பாண்டிப் பதிகம் – Thiruppandi pathikam 37. பிடித்தபத்து – Pidiththa paththu 38. திருவேசறவு – Thiruvesaravu 39. திருப்புலம்பல் – Thirup pulambal 40. குலாப் பத்து – Kulaap paththu 41. அற்புதப்பத்து – Atputhap paththu 42. சென்னிப்பத்து – Chennip pathu 43. திருவார்த்தை – Thiru varththai 44. எண்ணப்பதிகம் – Ennap pathikam 45. யாத்திரைப்பத்து ) – Yathiraip Paththu 46. திருப்படை எழுச்சி – Thirupadai ezhuchi 47. திருவெண்பா – Thiruvenbaa 48. பண்டாய நான்மறை – Pandaaya Nanmarai 49. திருப்படை ஆட்சி – Thirupadai Aadchi 50. ஆனந்தமாலை – Aananda Malai 51. அச்சோப்பதிகம் – Achchop Pathigam