"ஓயாதே உள்குவார் உள்ளிருக்கும் உள்ளானைச் சேயானைச் சேவகனைத் தென்னன் பெருந்துறையின் மேயானை வேதியனை மாதிருக்கும் பாதியனை நாயான நந்தம்மை ஆட்கொண்ட நாயகனைத் தாயான தத்துவனைத் தானே உலகேழும் ஆயானை ஆள்வானப் பாடுதுங்காண் அம்மானாய்." Thiruvasagam Playlist Link : • கடையவனேனைக் - மாணிக்கவாசகர் அருளிய திருவாச... திருவாசகம் என்பது சைவ சமயக் கடவுளான சிவபெருமான் மீது பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு ஆகும். இதனை இயற்றியவர் மாணிக்கவாசகர். பன்னிரு சைவ சமயத் திருமுறைகளில் திருவாசகம் எட்டாம் திருமுறையாக உள்ளது. திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் என்பது மூதுரை. பக்திச் சுவையும், மனதை உருக்கும் தன்மையும் கொண்ட திருவாசகப் பாடல்கள், தமிழில் சிறந்த இலக்கியங்களின் வரிசையில் வைத்து எண்ணப்படுகின்றன. திருவாசகம் 51 பகுதிகளையும் 658 பாடல்களையும் கொண்டுள்ளது. நீத்தல் விண்ணப்பம் 50 பாடல்களைக் கொண்டுள்ளது. திருவெம்பாவையில் 20 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. திருவம்மானையும் 20 பாடல்களில் நடையிடுகிறது. திருப்பொற் சுண்ணம் முதல் திருவுந்தியார் வரை 6 பகுதிகளும் அவ்வாறே 20 பாடல்களால் நடையிடுகின்றன. எஞ்சிய பகுதிகள் பெரும்பாலும் 10 பாடல்கள் கொண்ட பதிகங்களாகவே அமைந்துள்ளன. ‘திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்’ என்பது இதன் சிறப்பை உரைக்கும் பழமொழி. Peppers Entertainment Television is the urban next generation Tamil channel that seeks to redefine entertainment. We have a fresh upbeat approach with innovative programming that helps us win the hearts of audiences and builds the essential connect. A catalyst in setting new trends! Subscribe to our Channel: / @peppersbhakti Also follow us on : Facebook : / pepperstv Instagram : / pepperstvtamil Twitter : / pepperstvtamil ஓயாதே உள்குவார் - மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் பாடல்கள் | #Thiruvasagam #EP57