Aathi Pitha Kumaran |Tamil Christhava Keerthanai |Gabriel Upathesiar | Sis. Monisha Caroline | IGM

Aathi Pitha Kumaran |Tamil Christhava Keerthanai |Gabriel Upathesiar | Sis. Monisha Caroline | IGM

Song : Aathi Pitha Kumaran Lyric : Gabriel Upathesiar Sung & Featuring : Sis. Monisha Caroline Video : Sam Photography ஆதி பிதா குமாரன் ஆவி திரியேகர்க்கு அனவரதமும் ஸ்தோத்ரம்! திரியேகர்க்கு அனவரதமும் ஸ்தோத்ரம். அனுபல்லவி நீத்த முதற் பொருளாய் நின்றருள் சர்வேசன் , நிதமும் பணிந்தவர்கள் இருதயமலர் வாசன் , நிறைந்த சத்திய ஞான மனோகர உறைந்த நித்திய வேதா குணாகர, நீடு வாரி திரை சூழ மேதினியை மூடு பாவ இருள் ஓடவே அருள் செய் .-ஆதி சரணங்கள் எங்கணும் நிறைந்த நாதர் – பரிசுத்தர்கள் என்றென்றைக்கும் பணிபாதர் , துங்கமா மறைப்பிர போதர்-கடைசி நடு சோதனைசெய் அதி நீதர், பன் ஞானம்,சம்பூரணம் ,பரிசுத்தம் ,நீதி என்னும் பங்கில்லான் , தாபம் இல்லான் ,பகர்அடி முடிவில்லான் பண்பதாய்சு யம்பு விவேகன், அன்பிரக்கத யாளப்பிரவாகன் பார்தலத்தில் சிருஷ்டிப்பு , மீட்பு ,பரி பாலனைத்தையும் பண்பாய் நடத்தி , அருள் .- ஆதி நீதியின் செங்கோல் கைக்கொண்டு -நடத்தினால் நாம் நீணலத்தில்லாமல் அழிந்து , தீதறு நரகில் தள்ளுண்டு -மடிவோ மென்று தேவ திருவுளம் உணர்ந்து, பாதகர்க் குயிர் தந்த பாலன் ஏசுவைக் கொண்டு பரண் எங்கள்மிசை தயை வைத்தனர் ;இது நன்று பகர்ந்த தன்னடி யார்க்குறு சஞ்சலம் , இடைஞ்சல் வந்த போதே தயவாகையில் பாரில் நேரிடும் அஞ்ஞான சேதமுதற் சூரியன் முன் இருள் போலவே சிதறும் .- ஆதி பாடலின் பொருள் பல்லவி பிதா, குமாரன்,பரிசுத்த ஆவி என ஆதியிலேயே இருந்துவரும் மூவொரு தெய்வத்தை இடைவிடாமல் போற்றுவோம். எப்பொழுதும் போற்றுவோம். அனுபல்லவி நீதியின் முதல் பொருளாக அமைந்து அருள்புரியும் . அனைத்துக்கும் தெய்வமாகத் திகழும் அவரை ஒவ்வொருநாளும் வணங்கி நிற்பவர் உள்ளமாகிய மனதில் வாழ்பவர். இவர் உண்மை ஞானத்தின் முழுமையான அழகுடையவர். நிலையான வேதாகமம் கூறும் பண்புகளின் உறைவிடம். அடங்காத அலைகன் எப்போதும் சூழ்ந்திருக்கும் இந்த உலகத்தை மூடிக்கிடக்கும் பாவமாகிய இருள் ஓடுமாறு அருள்புரிகின்றார். சரணம் 1 எங்கும் நிறைந்தவர் என்றும் தூயவர் வணங்கும் திருவடிகளை உடையவர். உயர்ந்த வேதாகமத்திற்கு விளக்கம் தருபவர். நியாயத்தீர்ப்பு நாளிலே விசாரிக்கப்போகின்ற உயர் நீதியரசர். நடுநலையாளர் தன்பமற்றவர் இவர் தொடக்கத்தையும் முடிவையும் எடுத்துக்கூற முடியாது பலதரப்பட்ட ஞானத்தின் நிறைவு தூய்மை நீதி எனும் பண்புகளைக் கொண்ட தான்தோன்றியான அறிவுக்கூர்மை உடையவர். அன்பும், இரக்கமும், அருளும் இவரிடம் கரைபுரண்டோடும். இந்த உலகில் படைப்பு, மீட்பு, காப்பு ஆகியவற்றை அருளால் பண்புடன் நடத்துபவர். சரணம் 2 நீதியாகிய செங்கோலைக் கொண்டு நம்மை நடத்தினால் அகன்ற நிலப்பரப்பைக் கொண்ட உலகத்திலிருந்து அழிந்து நரகத்தில தள்ளப்பட்டுப்போவோம். மடிந்து போவோம் என்கின்ற தெய்வத்தின் திட்டத்தை உணர்ந்து தீயவராகிய எங்களுக்கு தம் அன்பை குழந்தை இயேசுவைக் கொண்டு கடவுள் எங்கள்மீது இரக்கம் வைத்தார். இதனை நன்கு எடுத்துக்கூறிய தமது அடியவருக்கு வருத்தங்கள், தடைகள் வருகின்றபோது இரங்கி உதவினீர். இதனால் சூரியனைக் கண்ட இருள் போல உலகில் தோன்றும் அறியாமை நொறுங்கிப்போகும்.