நாடார் பேரவையின் தென் சென்னை மாவட்ட முப்பெரும் விழா கூட்டம் இன்று சைதாப்பேட்டை கிறிஸ்துவ கல்லூரி வளாகத்தில் மாவட்டச் செயலாளர் தேவேந்திரன் அவர்கள் வரவேற்புரையாற்றி,மாவட்ட தலைவர் சிவ சந்தானம் அவர்களின் தலைமையில், நிர்வாகிகள் பெருமாள் நாடார், ஜவஹர் ,வேல்குமார், ஆறுமுக பாண்டியன், சுனில் ராஜ், பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலையில் நிகழ்ச்சி துவங்கியது. சமத்துவ மக்கள் கழகம் நிறுவனத் தலைவரும், நாடார் பேரவை மாநில தலைவருமான எர்ணாவூர் நாராயணன் அவர்கள் நாடார் பேரவையின் தென் சென்னை மாவட்ட புதிய அலுவலகத்தை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார், அதன் பின்பு மாணவ மாணவியர்களுக்கு கல்வி ஊக்கத் தொகையை விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பிரபாகர ராஜா அவர்கள் வழங்கினார். தென்சென்னை மாவட்ட உறுப்பினர்களுக்கு மாவட்ட சட்ட ஆலோசகர் சிவபெருமான், அவர்கள் பரிசு வழங்கி கவுரவித்தார். நிகழ்ச்சி துவக்கமாக பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் திருவுருவப் படத்தை நாடார் பேரவை மாநில துணைத் தலைவர் முருகேசன் அவர்கள் திறந்து வைத்தார். ஐயா பா சிவந்தி ஆதித்தனார் அவர்கள் திருவுருவப்படத்தை தலைவர் அவர்கள் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் தலைமை நிலைய செயலாளர் தங்கமுத்து, தங்கமுத்து பொருளாளர் கண்ணன், DMNS சென்னை கிளை சேர்மன் செல்வராஜ் ,DMNS சென்னை கிளை துணைத்தலைவர் உத்தர குமார், செயலாளர் ராஜேந்திரன், ஆலந்தூர் நாடார் சங்க தலைவர் கணேசன், ஈக்காடு நாடார் சங்க தலைவர் அஜய் கோஸ் தென்னக சான்றோ சங்க பொருளாளர் முத்து நாடார், செங்கல்பட்டு தெற்கு மாவட்ட நாடார் பேரவை தலைவர் சுதாகர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். இறுதியாக தலைவர் அவர்கள் பெருந்தலைவர் வாழ்க்கை வரலாறு கவிதை புத்தகத்தை வெளியிட சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் அதனைப் பெற்றுக் கொண்டார் . தலைவர் அவர்கள் சிறப்புரையாற்றினார் இந்நிகழ்வில் வர்த்தகர் அணி செயலாளர் சுப்பையா, இளைஞர் அணி துணை செயலாளர்கள் கராத்தே ரவி, பால சேகர் மாநிலமகளிரணி துணைச்செயலாளர் தேவி, வடசென்னை நாடார் பேரவை மாவட்ட செயலாளர் சீனிவாசன், சமத்துவ மக்கள் கழகம் மாவட்ட செயலாளர்கள் லார்டு பாஸ்கர், பழனி முருகன், ஸ்ரீராம், துரைமாணிக்கம், சுபாஷ், ராஜலிங்கம், மற்றும் சுரேஷ், சிவகுமார் ,மாத்தூர் அந்தோணி நாடார், குமார் ,ராஜேஷ், ராஜ புஷ்பம், பிரபாகரன், மனோகரன், பாக்யராஜ் , பெருமாள், துரை மணி, குமரேசன், சுப்பிரமணி, சங்கரபாண்டியன், முத்துக்குமார், சுடலைமணி, பெரியப்பன், செல்வகுமார், சண்முகசுந்தரம், ராபர்ட் ,சதீஷ் மற்றும் சைதாப்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், ஆலந்தூர், பொத்தேரி, கூடுவாஞ்சேரி ,கிண்டி மறைமலைநகர், வடபழனி, சைதாப்பேட்டை, மாதவரம், மாடம்பாக்கம், எம்ஜிஆர் நகர் போன்ற சங்கங்கள் இருந்து ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.