தமிழியைத் தேடி - 2

தமிழியைத் தேடி - 2

அரிட்டாபட்டி ஒரு பூலோக சொர்க்கம். இயற்கை அழகு கொஞ்சும் இந்த கிராமத்தில் கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்த இரண்டு தமிழி கல்வெட்டுகள் கொண்ட ஒரு சமணர் படுகை, 7ம் நூற்றாண்டைச் சார்ந்த ஒரு குடைவரைக் கோயில், 9ம் நூற்றாண்டைச் சார்ந்த வட்டெழுத்துகள் கொண்ட ஒரு தீர்த்தங்கர் சிலை, 14 ம் நூற்றாண்டைச் சார்ந்த சில தமிழ் கல்வெட்டுகள் , 150 க்கும் மேற்பட்ட பறவையினங்கள் , ஏழு மலைகள், நிறைய நீர் நிலைகள் என்று எல்லா வளங்களும் கொட்டிக் கிடக்கின்றன. இதற்கு முந்தைய என்னுடைய தேடலான குன்றக்குடியைக் காண இந்த லிங்க்கை சொடுக்கவும் :    • தமிழியைத் தேடி -1   என்னுடைய அனைத்து படைப்புகளையும் ( Wildlife Photos, Tutorials on Photography, முள்றியின் டைரி, மற்றும் வரலாறு சம்பந்தமான அனைத்து கட்டுரைகளையும்) படிக்க, கீழே உள்ள என்னுடைய இணைய தளத்திற்கு செல்லவும்: https://www.balasjourney.com