இந்த மஹா மிருத்யுஞ்ஜய மந்திரம் (Maha Mrityunjaya Mantra) பிரம்மிருஷி வஷிஷ்ட மைத்ரவரூணி வழங்கிய ரிக் வேதத்தின் 7 வது மண்டலத்திலிருந்து வந்தது… நோய் தாக்கியவர்கள் மற்றும் உடல் நலன் குறைபாடுகளில் உள்ளவர்கள் இந்த மந்திரத்தை தொடர்ந்து தினமும் சொல்லி வந்தால் விரைவில் நோய் குணமாகும் என்பது நம்பிக்கை. ரிக் வேதத்திலும், யஜூர் வேதத்திலும் குறிப்பிடப்பட்டுள்ள இந்த மகா மிருத்யுஞ்ஜய மந்திரத்தை தினமும் 108 முறை ஜெபிப்பதன் மூலம் மரண பயம் நீங்கும், ஆயுள் அதிகரிக்கும், இறை வழிபாட்டில் நாட்டம் ஏற்படும், தீராத நோய் தீரும் என்ற நம்பிக்கை உள்ளது… ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம் உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்… இயற்கையாகவே நறுமணம் கொண்டவரும், அடியவர்களுக்கு கருணையை ஊட்டி வளர்பவருமான முக்கண் கொண்ட எம் பெருமானே உங்களை பூஜித்து வழிபடுகிறோம். காம்பில் இருந்து வெள்ளரிப்பழம் எப்படி விடுபடுகிறதோ அது போல மரணத்தின் பிடியில் இருந்து என்னை விடுவித்து சன்மார்க்க நெறியில் இருந்து பிறழாமல் வாழ்ந்திட அருள்பாலிக்க வேண்டுகிறேன். Maha Mrityunjaya Mantra Lyrics in Sanskrit and English. ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् | उर्वारुकमिव बन्धनान्मृत्योर्मुक्षीय माऽमृतात् || Aum Tryambakam yajaamahe sugandhim pushtivardhanam | Urvaarukamiva bandhanaan-mrityormuksheeya maamritaat || The Meaning of the Mantra We worship the three-eyed One, who is fragrant and who nourishes all. Like the fruit falls off from the bondage of the stem, may we be liberated from death, from mortality.