அரோகரா கோஷத்துடன் அலங்கரிக்கப்பட்ட தேரை பக்தர்கள் பக்தியுடன் வடம் பிடித்து இழுத்தனர். திருப்போரூர் முருகன் கோவிலில் பிரம்மோற்சவ திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் விமர்சையாக நடைபெற்று வருகிறது முருகர் வள்ளி தெய்வானையுடன் அலங்கரிக்கப்பட்ட தேரில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார் , மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் மற்றும் சிவாச்சாரியார்கள், பக்தர்கள் என லட்சக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர், வழியெங்கும் நீர்மோர் உணவு உள்ளிட்டவை அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் புகழ்பெற்ற முருகன் கோவில் பிரம்மோற்சவ விழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி கணபதி ஹோமம், ஆறாம் கால பூஜை, அபிஷேக ஆராதனை போன்றவை நடைபெற்றது.. முருகப் பெருமான் வள்ளி தெய்வானையுடன் காலை மற்றும் இரவு இருவேளையும் கிளி வாகனம், பூத வாகனம், வெள்ளி அன்ன வாகனம், வெள்ளி மயில் வாகனம், தங்கமயில் வாகனம் பஞ்சமூர்த்தி புறப்பாடு, யானை வாகம் போன்றவற்றில் எழுந்தருளி முருகப்பெருமான் நான்கு மாடவீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதனைத் தொடர்ந்து பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று மிக விமர்சையாக நடைபெற்று வருகிறது, . முருகப்பெருமான் வள்ளி தெய்வனையுடன் அலங்கரிக்கப்பட்ட தேரில் பவனி வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். வழியெங்கும் நீர்,மோர், உணவு,, குளிர்பானம், சுண்டல் போன்றவை அன்னதானமாக தேரிழுக்கும் பக்தர்களுக்கு வழங்கினர். பகல் 5.00 மணியளவில் தேர் நிலையை அடைய உள்ளது. தேரோட்டத்தில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல், மற்றும் சிவச்சாரியார்கள், பக்தர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தேரை வடம்பிடித்து இழுத்து வந்தனர். சுகாதாரப்பணிகளை திருப்போரூர் பேரூராட்சி நிர்வாகம் செய்திருந்தது. வரும் 26-ந் தேதி( வெள்ளிக்கிழமை) தீர்த்தவாரியும், அன்று இரவு தெப்பத்திருவிழாவும் நடைபெறுகிறது. 28-ந்தேதி திருக்கல்யாணம் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை காஞ்சிபுரம் தக்கார்/உதவிஆணையர் ரேணுகாதேவி, கோவில் செயல் அலுவலர் சக்திவேல் கோவில், மேலாளர் வெற்றிவேல் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர். #தேர் #திருவிழா #முருகன் #thiruporur #murugantemple #therthiruvizha #thiruporurkavadi #murugankavadi #kavadi #muruganpadalgal #திருப்போரூர்காவடி #முருகன்காவடி #முருகன்பாடல்கள் #காவடிபாடல்கள் #thiruporurmurugankovil #thiruporurkavadi #ஆலயதரிசனம்