Medicinal Uses of Kovaikai | Kovakkai Health Benefits| Kovakkai uses | Ivy Gourd Tips in Tamil |BTTL

Medicinal Uses of Kovaikai | Kovakkai Health Benefits| Kovakkai uses | Ivy Gourd Tips in Tamil |BTTL

Medicinal Uses of Kovaikai | Kovakkai Health Benefits in Tamil |kovakkai uses | Ivy Gourd Tips in Tamil | BTTL புதர்களிலும் வீணாக கிடக்கும் இடங்களிலும் தானாக வளரும் கோவை கொடியின் முழுத்தாவரமும் மருத்துவகுணம் கொண்டது. சிலருக்கு பாகற்காய் கூட பிடிக்கும், ஆனால் கோவைக்காய் பிடிக்காது.சில உணவுகளை நாம் நம் உடல் நலத்திற்காக சாப்பிட்டாக வேண்டும். அந்த வகைகளில் கோவக்காயிம் ஒன்று. கோவைக்காயை நாம் அடிக்கடி உணவில் எடுத்துக் கொள்ள கொள்ளும்போது நம் உடம்பில் பல நோய்களை குணப்படுத்துகிறது. கோவைக்காயில் உள்ள சத்துக்கள் என்னவென்று பார்த்தால் செயல்திறன்மிக்க தையாமின், ரிபோஃப்ளோவின் ,நையாசின், அஸ்கார்பிக் அமிலம், குக்கர்பிட்டா சீன், லினோஈக் அமிலம் ,போன்ற பல வேதிப்பொருட்கள் நிறையவே உள்ளன. 100 கிராம் கோவைக்காயில் 1.5 மில்லி கிராம் இரும்புச்சத்து, 6.8 மில்லிகிராம் வைட்டமின் பி2, 1.6 கிராம் நார்ச்சத்து ,மற்றும் 40 மில்லி கிராம் கால்சியம் உள்ளது. இப்படி மிகப்பெரிய அளவில் சத்துக்களைக் கொண்ட கோவைக்காய் யாருக்கெல்லாம் மிகுந்த அளவில் பயனுள்ளதாக இருக்கிறது என்பதனை பார்ப்போம். தினமும் மூன்று வேளை கோவைக்காயை ஜூஸாக செய்து சாப்பிட்டு வரும்போது உடம்பில் ஏற்படும் படை, சிரங்கு, தேமல், சொரியாசிஸ் போன்ற பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும். எப்போதும் கோவைக்காய் ஜூஸ் குடிப்பதற்கு முன்பு வயிற்றை நன்றாக சுத்தம் செய்தபின் குடிப்பது ரொம்ப நல்லது. இலங்கையிலும், இந்தியாவிலும் பழங்காலத்திலிருந்தே கோவைக்காய் நீரிழிவு நோய்க்கு மருந்தாக பயன்படுத்தி வருகின்றனர். கோவக்காய் தண்டுகளின் மேல் பகுதி மற்றும் அதன் இலைகளை சமையலில் சேர்த்து வந்தனர். பரம்பரை காரணமாகவோ அல்லது ஒருவரின் தவறான உணவுப் பழக்கங்களாலும் நீரிழிவு எனப்படும் சர்க்கரை வியாதி ஏற்படுகிறது.இப்படி சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இந்த கோவைக்காயை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சரியாக வைப்பதோடு, சர்க்கரை நோயால் சிலருக்கு அதிகளவில் சிறுநீர் போக்கு ஏற்படும். இதை இந்த கோவக்காய் ஜூஸ் கட்டுப்படுத்துகிறது. கோவைக்காயை பச்சையாக மென்று துப்பி விட்டாலே வாய்ப்புண் ஆறிடும். வாய்ப் புண் இருப்பவர்கள் வாரம் 2 நாள் கோவைக்காயை சேர்த்துக் கொள்ளலாம்.கோவைக்காயை மோருடன் சேர்த்து அரைத்து குடித்தாலும் நல்ல பலன் கிடைக்கும். பல் வலி, ஈறுகளில் வலி, வீக்கம், ஈறுகளில் ரத்தக் கசிவு, மஞ்சள் கறை அனைத்தையும் கோவைக்காய் ஜூஸ் குறைகிறது. கோவைக்காய் பெருங்குடல் மற்றும் ஜீரண உறுப்புகளில் தேங்கும் கழிவுகளை நச்சுக்களையும் வெளியேற்றுகிறது. எனவே வயிற்றில் புற்றுநோய் ஏற்படாமல் இருக்க உணவில் அடிக்கடி கோவைக்காயை சேர்த்து சாப்பிட வேண்டும். கோவைக்காயில் இயற்கையாகவே கொழுப்பை வெளியேற்றும் தன்மை இருப்பதால், வளர்சிதை மாற்றத்தால் உண்டாகும் உடல்பருமன் போன்ற பிரச்சினைகளை தீர்க்க இந்த காய் ஒரு சிறந்த தீர்வாக உள்ளது. வைட்டமின் பி2 தண்ணீரில் கரையக்கூடிய ஒரு ஊட்டச்சத்தாகும். உடலுக்கு தேவையான ஆற்றலின் உற்பத்தியில் முக்கிய பங்கு இந்த வைட்டமின் b2 இருப்பதால், இது ஒரு மிகவும் தேவையான ஊட்டச்சத்தாகும். இந்த சத்துக்கள் அதிகமாக கோவைக்காயில் இருப்பதால் இது நரம்பு மண்டலத்தை பலம் ஆக்குகிறது. பதட்டம், கை கால்களில் உணர்வின்மை, அல்சைமர் நோய், போன்ற பல நரம்பு தொடர்பான பிரச்சனைகளை சரி செய்வதில் கோவைக்காய் பெரும்பங்கு வகிக்கிறது. கோவைக்காயில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இரைப்பை கோளாறுகள், அல்சர் ,மலச்சிக்கல் ,மூலநோய் போன்றவை தடுக்கப்படுகின்றன. இதய நலத்திற்கு பொட்டாசியம் சத்து தேவையாக இருக்கிறது. ரத்த அழுத்தத்தை சீரான நிலையில் வைத்து இதயத்திற்கு சரியான அளவில் ரத்தம் சென்றுவர கோவைக்காய் நிறைந்திருக்கும் பொட்டாஷியம் பெரிய அளவில் உதவியாக இருக்கிறது. இதய நோய்கள் ஏற்படுவதை தவிர்க்க கோவைக்காய் அதிகம் சாப்பிடவேண்டும். கோவைக்காய் அதிகம் உட்கொண்டால் சிறுநீரகக் கற்கள் வருவதை தடுக்க முடியும். இத்தனை நல்ல பலன்களை கொண்ட கோவைக்காயை இனி நமது உணவில் அடிக்கடி எடுத்து பயன்பெறுவோம். #Healthtipsintamil #BTTLvideos #BTTLHealthtips #Backtotamillife Follow Us On Youtube :    / backtotamillife   FaceBook :   / backtotamillife   Instagram:   / backtotamillife   E-Mail : [email protected]