இந்தோனேசியாவில் சிவன் கோவில் | Prambanan Temple History | Tamil

இந்தோனேசியாவில் சிவன் கோவில் | Prambanan Temple History | Tamil

சாவகத்தின் ஒன்பதாம் நூற்றாண்டு பௌத்தவம்சமான சைலேந்திர வம்சத்துக்குப் போட்டியாக, இந்து வம்சமான சஞ்சய வம்சத்தால் அமைக்கப்பட்டதே இப்பிரமாண்டமான இந்துக் கோயில் ஆகும். இக்கோயிலின் பிரமாண்டக் கட்டமைப்பானது, மத்திய ஜாவாவின் மாதாராம் அரசில், மகாயான பௌத்தத்தின் வரவால் வீழ்ச்சியடைந்திருந்த இந்து அல்லது சைவசமயம், பழையபடிக்கு முன்னிலைக்கு வர ஆரம்பித்ததைச் சுட்டுவதாக ஆய்வாளர்கள் சொல்கின்றனர். இதை அமைத்தவர், சஞ்சய வம்ச மன்னன் "ராகாய் பிகாதன்" என்று நம்பப்படுகின்றார். பிகாதனால் பொ.பி 850 அளவில் ஆரம்பமான இதன் கட்டுமானம், மன்னன் லோகபாலனாலும், பாலிதுங் மகாசம்பு மன்னனாலும் கட்டிமுடிக்கப்பட்டது. அதன் பின்னும், இக்கோயில், தட்சன், துலோதுங் முதலான பிற்கால மன்னர்களால் விரிவாக்கம் பெற்றிருக்கின்றது. 930களில், ஈசியான வம்சத்து இம்பு சிந்தோக் மன்னனால் மாதாராம் அரசு, கிழக்கு சாவகத்துக்கு இடமாற்றப்பட்டதை அடுத்து, பிரம்பானான் வளாகம் பொலிவிழக்கத் தொடங்கியது. பின்பு முற்றாகக் கைவிடப்பட்ட பிரம்பானான், பதினாறாம் நூற்றாண்டில் இடம்பெற்ற பாரிய பூமியதிர்வு ஒன்றால் பெருத்த சேதமடைந்ததுடன், சிதைந்த அப்பிரமாண்டக் கோயில் இடிபாடுகள் உள்ளூர்வாசிகளை அச்சுறுத்தியதுடன், அதைச் சுற்றி சுவாரசியமான மீமாந்தக் கதைகளையும் கட்டச் செய்தது. சிதைந்துபோய் காட்டுக்குள் உடைந்தொழிந்து கிடந்த பெருங்கோயில் பற்றி உள்ளூர்வாசிகள் அறிந்திருந்தாலும், அதன் வரலாற்று முக்கியத்துவத்தை அறிந்திருக்கவில்லை. இப்பகுதியில் கிடைத்த சிற்பங்களையும் கற்களையும் எடுத்துச் சென்று, அலங்காரப் பொருட்களாகவும் கட்டுமானங்கள் அமைக்கவும் பயன்படுத்துவதே தொடர்ந்தது. 1918 ஆம் ஆண்டு, எஞ்சிய சிதைவுகளைப் பாதுகாத்து சீரமைக்கும் பணியை, அப்போது சாவகத்தை ஆண்ட இடச்சு அரசு ஆரம்பித்தது. 1953 இல், பிரதான ஆலயமான சிவன் கோயில் முற்றாக மீளமைக்கப்பட்டு, சுகர்ணோவால்திறந்துவைக்கப்பட்டது. The Prambanan temple is the largest Hindu temple of ancient Java, and the first building was completed in the mid-9th century. It was likely started by Rakai Pikatan and inaugurated by his successor King Lokapala. Some historians that adhere to dual dynasty theory; suggest that the construction of Prambanan probably was meant as the Hindu Sanjaya Dynasty's answer to the Buddhist SailendraDynasty's Borobudur and Sewu temples nearby. Which means to mark the return of the Hindu Sanjaya Dynasty to power in Central Java after almost a century of Buddhist Sailendra Dynasty domination. Nevertheless, the construction of this massive Hindu temple did signifies a shift of the Medang court's patronage; from Mahayana Buddhism to ShaiviteHinduism. A temple was first built at the site around 850 CE by Rakai Pikatan and expanded extensively by King Lokapala and Balitung Maha Sambu the Sanjaya king of the Mataram Kingdom. A short red-paint script bearing the name "pikatan" was found on one of the finials on top of the balustrade of Shiva temple, which confirms that King Pikatan was responsible for the initiation of the temple construction. The temple complex is linked to the Shivagrha inscription of 856 CE, issued by King Lokapala, which described a Shiva temple compound that resembles Prambanan. According to this inscription the Shiva temple was inaugurated on 12 November 856.[5]:20According to this inscription, the temple was built to honor Lord Shiva, and its original name was Shiva-grha (the House of Shiva) or Shiva-laya (the Realm of Shiva). With main prasada tower soaring up to 47 metres high, a vast walled temple complex consists of 240 structures, Shivagrha Trimurti temple was the tallest and the grandest of its time. Indeed the temple complex is the largest Hindu temple in ancient Java, with no other Javanese temples ever surpassed its scale. Prambanan served as the royal temple of the Kingdom of Mataram, with most of the state's religious ceremonies and sacrifices being conducted there. At the height of the kingdom, scholars estimate that hundreds of brahmins with their disciples lived within the outer wall of the temple compound. The urban center and the court of Mataram were located nearby, somewhere in the Prambanan Plain. #ArjunaChannel #Prambanantemple