முட்டைக்கோசு பக்கோடா செய்முறை (Cabbage Pakoda)

முட்டைக்கோசு பக்கோடா செய்முறை (Cabbage Pakoda)

Healthy Evening Vegetable Snacks - காய்கறிகள் இல்லாத சாப்பாடு ஒரு முழுமையான உணவை சாப்பிட திருப்தியை தராது. சில காய்கறிகளை அனைவரும் விரும்பி சாப்பிடமாட்டார்கள். ஆனால் சில காய்களை எல்லோரும் மிகவும் விரும்பி உண்பார்கள். அப்படிப்பட்ட காய்களில் ஒன்று தான் “முட்டைகோஸ்”. இது முழுவதும் இலைகளால் ஆன ஒரு காய் வகையாகும். உடல் எடை குறைப்பு கட்டுப்பாடில்லாமல் எந்த வகையான உணவுகளையும் உண்பது, சரியான உடற்பயிற்சி மேற்கொள்ளாமல் இருப்பது போன்றவை உடல் பருமன் ஏற்படுவதற்கு அதிகம் காரணமாக இருக்கிறது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் அடிக்கடி முட்டைகோஸ் சாப்பிட்டு வந்தால் விரைவாக உடல் எடையை குறைக்க முடியும். தலைமுடி நமது உச்சந்தலையை அதிக வெப்பம் மற்றும் குளிரிலிருந்து காப்பது நமது தலைமுடி ஆகும். தலைமுடி நன்றாக இருப்பது நல்ல உடல் நலத்தின் அறிகுறியாகும். சிலருக்கு தலைமுடி உதிர்தல், பொடுகு போன்ற பிரச்சனைகள் அதிகம் ஏற்படுகின்றன. அவற்றை நீக்க தினந்தோறும் அல்லது வாரத்தில் மூன்று முறையாவது முட்டைகோஸ் சேர்க்கப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிடுவதன் மூலம் மேற்கண்ட தலைமுடி சார்ந்த பிரச்சனைகளை தீர்க்கலாம். ரத்த அழுத்தம்: மனிதர்கள் அனைவருக்குமே அவர்களின் வயதை பொறுத்து ரத்த அழுத்தம் மாறுபடுகிறது. 30 வயதை கடந்த பலரையும் உயர் ரத்த அழுத்தம் மற்றும், குறைந்த ரத்த அழுத்தம் நோய் இன்றைய காலங்களில் பாதிக்கிறது. இப்பாதிப்பு ஏற்பட்டவர்கள் முட்டைகோஸை தங்களின் உணவுகளில் அதிகம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்த குறைபாடுகள் வெகு விரைவில் நீங்கும்.