தமிழில் பேசவேண்டும் - தானி ஓட்டுனர்

தமிழில் பேசவேண்டும் - தானி ஓட்டுனர்

தமிழர் பண்பாட்டு நடுவம் சென்னையில் நடத்திய மொழிப் பரப்புரையில் இந்த காணொளியை பதிவு செய்தோம். தானி ஓட்டுனர்களுக்கு வாழ்க தமிழ் என்ற வாசகத்தை கொண்ட பசை ஒட்டியை கொடுத்து தானியில் ஒட்ட வேண்டினோம். இந்த தானி ஓட்டுனர் ஆர்வமாக அதை ஒட்டிக் கொண்டார் . சென்னையில் தமிழில் யாரும் பேசவதில்லை. குழந்தைகளும் தமிழை கற்பதில்லை . அதனால் மொழி அழிந்துவிடும் ஆபத்து இருக்கிறது. பொது மக்கள் தமிழை விரும்ப வேண்டும், மொழியுணர்வு கொள்ள வேண்டும் . அதுவே இந்த தானி ஓட்டுனரின் ஆசை