thiruvAsagam - kOyil mUththa thiruppadhigam - 8.21 - திருவாசகம் - கோயில் மூத்த திருப்பதிகம் - 8.21 - Audio of class discussion இப்பதிகப் பாடல்களைக் கீழ்க்காணும் தளத்தில் காணலாம்: http://thevaramclass.blogspot.com/201... Verses of this padhigam are available in the above URL. V. Subramanian For more info: http://thevaramclass.blogspot.com/ திருவாசகம் - கோயில் மூத்த திருப்பதிகம் - 8.21 குறிப்பு: இப்பதிகம் அந்தாதியாக அமைந்துள்ளது. -------------- பாடல் எண் : 1 உடையாள் உன்-தன் நடு இருக்கும்; .. உடையாள் நடுவுள் நீ இருத்தி; அடியேன் நடுவுள் இருவீரும் .. இருப்பது ஆனால், அடியேன் உன் அடியார் நடுவுள் இருக்கும் அருளைப் .. புரியாய், பொன்னம்பலத்து எம் முடியா முதலே, என் கருத்து .. முடியும் வண்ணம் முன் நின்றே. பாடல் எண் : 2 முன் நின்று ஆண்டாய் எனை முன்னம்; .. யானும் அதுவே முயல்வுற்றுப் பின் நின்று ஏவல் செய்கின்றேன்; .. பிற்பட்டு ஒழிந்தேன் பெம்மானே; என் இன்று அருளி வர நின்று .. "போந்திடு" என்னாவிடில், அடியார் உன் நின்று "இவன் ஆர்" என்னாரோ, .. பொன்னம்பலக் கூத்து உகந்தானே. பாடல் எண் : 3 உகந்தானே அன்புடை அடிமைக்கு; .. உருகா உள்ளத்து உணர்விலியேன் சகம்தான் அறிய முறையிட்டால் .. "தக்கவாறு அன்று" என்னாரோ; மகம்தான் செய்து வழிவந்தார் .. வாழ வாழ்ந்தாய்; அடியேற்கு உன் முகம்தான் தாராவிடில் முடிவேன், .. பொன்னம்பலத்து எம் முழுமுதலே. பாடல் எண் : 4 முழுமுதலே; ஐம்புலனுக்கும் .. மூவர்க்கும் என்-தனக்கும் வழிமுதலே; நின் பழ அடியார் திரள் .. வான் குழுமிக் ** கெழுமுதலே அருள் தந்திருக்க .. இரங்கும் கொல்லோ என்று அழும் அதுவே அன்றி மற்று என் .. செய்கேன் பொன்னம்பலத்து அரைசே. (** வான்குழுமிக் கெழுமுதலே = வான் குழுமிக் கெழுமுதலே / வான் குழு மிக்கு எழு முதலே)