குயவனே குயவனே- Bro.D Augustine Jebakumar GEMS BIHAR குயவனே குயவனே படைப்பின் காரணணே குயவனே குயவனே படைப்பின் காரணணே களி மண்ணான என்னையுமே கண்ணோக்கிப் பார்த்திடுமே வெறுமையான பாத்திரம் நான் வெறுத்துத் தள்ளமலே நிரம்பி வழியும் பாத்திரமாய் விளங்கச் செய்திடுமே வேதத்தில் காணும் பாத்திரமெல்லாம் இயேசுவைப் போற்றிடுமே என்னையும் அவ்வித பாத்திரமாய் வனைந்து கொள்ளுமே விலை போகாத பாத்திரம் நான் விரும்புவாரில்லையே விலையெல்லாம் உம் கிருபையால் உகந்த தாக்கிடுமே தடைகள் யாவும் நீக்கி என்னை தம்மைப் போல் மாற்றிடுமே உடைத்து என்னை உந்தனுக்கே உடைமை ஆக்கிடுமே மண்ணாசையில் நான் மயங்கியே மெய்வழி விட்டகன்றேன் கண்போன போக்கை பின்பற்றினேன் கண்டேனில்லை இன்பமே காணாமல் போன பாத்திரம் என்னை தேடி வந்த தெய்வமே வாழ்நாளெல்லாம் உம் பாதம் சேரும் பாதையில் நடத்திடுமே