Krishna jayanthi 2021 | முறுக்கு ,சீடை, அவல் லட்டு  | கடை அரிசி மாவில் முறுக்கும் சீடையும் செய்யலாமே

Krishna jayanthi 2021 | முறுக்கு ,சீடை, அவல் லட்டு | கடை அரிசி மாவில் முறுக்கும் சீடையும் செய்யலாமே

#krishnajayanthi2021 #seedai #murukku கடையில் வாங்கிய அரிசி மாவை வைத்து முறுக்கும் சீடையும் மிகவும் ஈஸியாக செய்யலாம்.கடையில் வாங்கிய அரிசி மாவை நன்கு சலித்து லேசாக வறுத்து எடுத்துக்கொண்டு பட்சணங்கள் செய்ய வேண்டும்.அதே சமயத்தில் பலகாரத்துக்கு உளுந்து மாவு சேர்க்கும்போது உளுந்தை இளம் சிவப்பாக வறுத்து மிக்ஸியில் பொடித்து சலித்து எடுத்துக்கொள்ள வேண்டும். 200 கிராம் அரிசி மாவுக்கு 2 டேபிள் ஸ்பூன் உளுந்து மாவு சேர்க்க வேண்டும். ஒரு டீஸ்பூன் வெள்ளை எள்ளு ஒரு டேபிள்ஸ்பூன் வெண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன் சூடான எண்ணெய் உப்பு தேவைக்கு பெருங்காயத்தூள் சிறிதளவு...இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு முறுக்கு மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.இதே மாவில் சீடை செய்வதாக இருந்தால் உருட்டி வெள்ளைத் துணியை விரித்துப் போட்டு உருண்டைகளை துணியில் போட்டு நன்கு உலர விடவும். பிறகு எண்ணெயில் நிதானமான தீயில் பொரித்தெடுக்கவும். அவல் லட்டு செய்வதற்கு ஒரு கப் அவல் எடுத்தால் முக்கால் கப் நாட்டுசர்க்கரை போதுமானது. முந்திரி நெய் ஏலக்காய்த்தூள் தேவைக்கு எடுத்துக் கொள்ளலாம். 4 டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவல் எடுத்துக்கொள்ளலாம்.வாணலியில் நெய் விட்டு முந்திரியை லேசாக வறுத்து தேங்காய் துருவலையும் நல்ல பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொண்டு இந்த லட்டு செய்ய வேண்டும். நான் இந்த எளிமையான முறையில் செய்திருக்கக் கூடிய பட்ஷணங்கள் உங்கள் அனைவருக்கும் பிடித்திருக்கும் என்று நினைக்கிறேன்.கிருஷ்ண ஜெயந்திக்கு நீங்களும் இதுபோல செய்து உங்கள் குழந்தைகளுடன் கொண்டாடுங்கள்.என் சேனலை இதுவரை சப்ஸ்கிரைப் செய்யாதவர்கள் சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்.இதுபோன்ற எளிமையான சத்தான சுவையான ரெசிபிக்கள் என்னுடைய சேனலில் நிறைய இடம் பெற்று இருக்கிறது. உங்கள் அனைவரையும் என் சேனலுக்கு என்றென்றும் அன்புடன் வரவேற்கிறேன்.அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்.