திருநீறு பூசி விட்டால், அதனை உடனடியாக அழித்து விடும் திமுக தலைவர் ஸ்டாலின்.

திருநீறு பூசி விட்டால், அதனை உடனடியாக அழித்து விடும் திமுக தலைவர் ஸ்டாலின்.

Click here to watch Live updates on election results:    • 🔴LIVE: Captain News Live Stream | Tamil Ne...   திருநீறு பூசி விட்டால், அதனை உடனடியாக அழித்து விடும் திமுக தலைவர் ஸ்டாலின். #DMK #Stalin #Tiruniru | #CaptainNews | நாத்திகவாதம் கடைப்பிடிக்கும் ஸ்டாலின் | தமிழக கோவில்களில் திருநீறு பூசி விட்டால் அதனை உடனடியாக அழித்து விடும் திமுக தலைவர் ஸ்டாலின், தற்போது ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி பதவி ஏற்பு விழாவில் அர்ச்சகர்கள் வைத்த திருநீறை அழிக்காமல் இருந்தது அவரது இரட்டை வேடத்தை காட்டுவதாக விமர்சனம் எழுந்துள்ளது. தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் திமுக தலைவருமான ஸ்டாலின் கடந்த ஆண்டு ஜுன் மாதம் 22-ம் தேதி திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் கோவிலுக்குச் சென்றார். அங்கு கோவில் அர்ச்சகர்கள் அவரது நெற்றியில் திருநீறு பூசினர். ஆனால் அவர் அதனை உடனே அழித்து விட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஆந்திர முதலமைச்சராக ஜெகன்மோகன் ரெட்டி பதவி ஏற்கும் விழா விஜயவாடாவில் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஸ்டாலினுக்கு, விழாவையொட்டி பூஜைகள் நடத்திய அர்ச்சகர்கள் திருநீறு பூசினர். இதனை ஸ்டாலின் அழிக்கவில்லை. தமிழகத்தில் மட்டும் நாத்திகவாதம் கடைப்பிடிக்கும் ஸ்டாலின், ஆந்திராவில் அதனை வெளிப்படுத்தாது ஏன் என்று பலர் கேள்வி எழுப்புகின்றனர். தமிழகத்தில் மட்டுமே இந்துக்களின் மத நம்பிக்கையை இழிவுபடுத்தும் போலி நாத்திகவாதத்தை திமுக தலைவர் முன்னெடுத்துச் செல்வது இதன் மூலம் உறுதியாகி உள்ளதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். Like:   / captainnewstv   Follow:   / captainnewstv   Web: http://www.captainnews.net