108 திவ்ய தேசங்களில் ஒன்றான நாதன்கோயில் செண்பகவல்லி தாயார் சமேத ஜெகந்நாதபெருமாள் திருக்கோயிலில் இன்று புரட்டாசி 2வது சனிக்கிழமையை முன்னிட்டு, மூலவர் மற்றும் உற்சவர் பெருமாள், தாயாருக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகளும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது, மூலவர் ஸ்ரீதேவி பூமிதேவி தாயார் சமேத ஜெகந்நாதப்பெருமாள் வெள்ளி கவசமுடன் விசேஷ புஷ்பஅங்கியில் அருள்பாலித்தார், இது கிராமப்புறத்தில் அமைந்துள்ள கோயில் என்பதால், கொரோனா தொற்று குறித்த அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சமூக இடைவெளியுடன், முககவசம் அணிந்த குறைவான பக்தர்கள் மட்டும் ஒருசமயத்தில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர் ! திருபாற்கடலில் அமுதம் கடையும் போது அவதரித்த ஸ்ரீ மகாலட்சுமி எம்பெருமானை அடைய பிராத்தனை செய்ய, தான் அமிர்த வினியோகம் செய்ய மோகனாவதாரம் கொண்டுள்ளதால் பூலோகத்தில் சக்ரபடித்துறைக்கு தெற்கேயும், நாச்சியார்கோயில், ஒப்பிலியப்பன் கோயிலுக்கு மேற்கேயும் உள்ள செண்பகாரண்யத்தில் தவம் செய்யும் படியும் அங்கு தான் ஏற்றுக்கொள்வதாகவும் திருவாய் மலர்ந்தருள, அதன்படி மகாலட்சுமி தாயாரும் திருநந்திபுர விண்ணகரம் என போற்றப்படும் கும்பகோணம் அருகேயுள்ள நாதன்கோயில் செண்பகமரத்தின் கீழ் எட்டு சுக்லபட்ச அஷ்டமி திதியில் தவம் செய்து பெருமாளின் திருமார்பில் இடம் பெற்றார் என்கிறது விஷ்ணுபுராணம் நான்குனேரி ஸ்ரீ வானமாமலை ஜீயர் சுவாமிகள் திருமட நிர்வாகத்திற்குட்பட்ட இச்சிறப்பு பெற்ற நாதன்கோயில் செண்பகவல்லி தாயார் சமேத ஜெகந்;நாதபெருமாள் திருக்கோயிலில் மூலவர் சீனிவாசன் மேற்கு நோக்கி வைகுண்டத்தில் உள்ளது போன்று ஸ்ரீதேவி, பூமிதேவி தாயாருடன் ஏக ஆசனத்தில் வீற்றிருந்த திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார் இங்கு செண்பகவல்லி தாயார் கிழக்கு முகம் நோக்கி தனி சன்னதி கொண்டு அருள்பாலிக்கிறார் ஜயவிஜயர்களால் அதிகார நந்திக்கு ஏற்பட்ட சாபம் இத்தலத்தில் வழிபாடு செய்து சாபநிவர்த்தி ஏற்பட்டதால், இத்தலம் நந்திபுர விண்ணகரம் என போற்றப்படுகிறது என்பது குறிப்பிடதக்கது திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இத்தலம், 108 திவ்ய தேசங்களில் 21வது தலமும், சோழ நாட்டு திருப்பதிகள் நாற்பதில் நடுநாயகமான தலமும் ஆகும். இது பிரம்மாவினால் பூஜிக்கப்பட்ட, மார்கண்டேயருக்கு காட்சியளித்த தலமும் ஆகும், குழந்தைபேறு இல்லாத தம்பதியர்கள் ஐப்பசி மாத சுக்லபட்ச வெள்ளிக்கிழமையில் தாயாருக்கு திருமஞ்சனம் செய்து பாயசம் நிவதனம் செய்தால் குழந்தைபேறு கிட்டும் என்பதும் ஐதீகம் மேலும் மாதம் தோறும் வளர்பிறை அஷ்டமி திதியில் தாயார் சன்னதியில் ஸ்ரீசுத்த ஹோமம் நடைபெறுவது வழக்கம் புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாக போற்றப்படுகிறது அதில் வரும் ஒவ்வொரு சனிக்கிழமையும் மிகவும் விசேஷமானது, இன்று புரட்டாசி 2வது சனிக்கிழமை என்பதால், மூலவர் மற்றும் உற்சவர் பெருமாள், தாயார் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் தொடர்ந்து விசேஷ பூஜைகளும் நடைபெற்றது இன்று மூலவர் ஸ்ரீதேவி பூமிதேவி தாயார் சமேத ஜெகந்நாதப்பெருமாள் வெள்ளி கவசமுடன் விசேஷ புஷ்பங்கியில் அருள்பாலித்தார், இது கிராமப்புறத்தில் உள்ள கோயில் என்பதால், கொரோனா தொற்று குறித்த அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக பின்பற்றி சமூக இடைவெளியுடன், முககவசம் அணிந்த குறைவான எண்ணிக்கையிலான பக்தர்கள் மட்டும் ஒருசமயத்தில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடதக்கது கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள ஏனைய திவ்ய தேச திருத்தலங்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்காத நிலையில், இங்கு மட்டும் உரிய வழிகாட்டு நெறிமுறைகளுடன் அனுமதிப்பது, பக்தர்களிடையே சற்று ஆறுதலையும், மனநிறைவையும் தந்துள்ளது