About video: இனி தங்கநகைக் கடனுக்கும் EMI ஆஃப்சன் வரப்போகுது.. விரைவில் குட் நியூஸ் சொல்லும் RBI! தங்க ஆபரணங்கள் மற்றும் நகைகளுக்கு கடன் வழங்குவதில் குறிப்பிடத்தக்க முறைகேடுகள் நடந்துள்ளன என்பதால் விரைவில் மக்கள் நலன் கருதி தங்க நகைக் கடனுக்கும் மாதாந்திர இ.எம்.ஐ ஆஃப்சனைக் கொண்டு வருவது குறித்து திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தங்கக் கடன் வழங்குவதில் உள்ள குறைபாடுகளை ரிசர்வ் வங்கி சுட்டிக்காட்டியதை அடுத்து, வங்கிகளும் தங்கக் கடன் வழங்கும் நிறுவனங்களும் மாதாந்திர கடன் தள்ளுபடி திட்டங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளன. புதிய முறையின் கீழ், கடனாளிகள் அசல் மற்றும் வட்டி இரண்டையும் சமமான மாதாந்திர தவணைகளில் (EMIs) கடன் காலத்தின் தொடக்கத்திலிருந்து செலுத்த வேண்டியிருக்கும். கூடுதலாக, பரவலாகப் பயன்படுத்தப்படும் புல்லட் திருப்பிச் செலுத்தும் முறைக்குப் பதிலாக, தங்கக் கடன்களை டெர்ம் லோன்களாக வழங்குவது குறித்து வங்கிகள் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக் கூறப்படுகிறது. நகை கடன் வாங்கியவர்களுக்கு புதிய அறிவிப்பு | Canara bank | Indian bank | IOB bank | Gold loan tamil #indianbank #canarabank நகை கடன் வாங்கியவர்களுக்கு புதிய அறிவிப்பு | Canara bank | Indian bank | IOB bank | Gold loan tamil