வீட்டுத்தோட்டம் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிட்டேப் போகுது. பலரும் காய்கறிகளை தாங்களே விளைய வெச்சு சாப்பிட பழகிட்டாங்க. இந்த நிலையில, மாடித்தோட்ட எண்ணிக்கையை அதிகப்படுத்த அரசாங்கமும் கவனம் செலுத்த தொடங்கியிருக்கு. இது ஆரோக்கியமான செய்தி. ரெண்டு, மூணு வருஷமா அரசு, மானிய விலையில குரோபேக் பைகளை கொடுத்துட்டு இருக்கு. முன்பு இது எல்லா மாவட்டத்திலும் கிடைக்காது. ஆனா, இப்போ பெரும்பாலான மாவட்டங்கள்ல இந்த திட்டத்தை செயல்படுத்தியிருக்காங்க. கூடவே மாடித்தோட்டம் அமைப்பதற்கான மானிய விலையில் உபகரணங்களையும் தமிழக அரசு கொடுத்து வருகிறது. தோட்டக்கலைத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கிடைக்கும். தற்போதுதான் இதனை விளம்பரப்படுத்தி வருகிறது தோட்டக்கலைத்துறை. ஏற்கெனவே வீட்டுத்தோட்டம் அமைத்துள்ளவர்களுக்கு மானிய விலையில் சொட்டு நீர் குழாய் அமைப்புகள் மானிய விலையில் வழங்கப்படுகின்றன. இந்த கிட்-டில் 6 குரோபேக், அதில் 2 கிலோ எடையுள்ள காயர்பித் கட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. 6 பாக்கெட் காய்கறி விதைகள், 200 கிராம் அசோஸைபைரில்லம், 200 கிராம் பாஸ்போ பாக்டீரியா, 200 பயோ கன்ட்ரோல் ஏஜென்ட், 100 மில்லி அசாட்டிராக்டின் (Azadirachtin) அதாவது வேப்பெண்ணெய் மருந்து அத்துடன் ஒரு செயல் விளக்கக் கையேடு ஆகியவை ஒவ்வொரு கிட்டிலும் இருக்கும். ஒவ்வொரு பாக்கெட்டிலும் அதிக விதைகள் இருக்கின்றன. நாட்டு ரக விதைகள் இல்லை. அனைத்தும் ஹைபிரிட் ரகங்கள்தான். ஒரு கிட்டின் விலை 850 ரூபாய். அதில் 40 சதவிகிதம் மானியம் போக 510 ரூபாய் கொடுத்து வாங்கிக்கொள்ளலாம். மாடித்தோட்டத்திற்குச் சொட்டுநீர் அமைப்பதற்காக அமைப்பின் மதிப்பு 1000 ரூபாய். அதில் மானியமாக 380 ரூபாய் போக, 720 ரூபாய் கொடுத்து வாங்கிக்கொள்ளலாம். இந்த மானியம் அனைத்து மாவட்டங்களிலும் கிடைக்கிறது. மாடித்தோட்டம் அமைக்க விரும்புகிறவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம். #மானிய-விலையில்-மாடித்தோட்ட-உபகரணங்கள், #மாடித்தோட்டம், #மாடித்தோட்டம் அமைப்பு முறைகள், #மாடித்தோட்ட பராமரிப்பு, #மாடித்தோட்ட செடிகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு, #மாடி தோட்டம் அமைக்க அரசு கொடுக்கும் மானியம் விபரம், #terrace gardening tips, #government grants for making terrace garden, #terrace garden