அத்திவரதரை தரிசித்த ரஜினிகாந்த்!! தரிசனத்தின் போது அத்திவரதர் தரிசனத்திற்கான 4,000 பாஸ் எங்கே?’- கொந்தளிக்கும் அதிகாரிகள்! காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் தரிசன விழா கடந்த மாதம் 1-ந்தேதி தொடங்கியது.31-ந்தேதி வரை சயன கோலத்தில் காட்சி அளித்த அத்திவரதர் இந்த மாதம் 1-ந்தேதி முதல் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அத்தி வரதரை தரிசிக்க நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. அத்திவரதர் தரிசனம் சயன கோலத்தில் தொடங்கியது. தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்ட வண்ணம் இருந்தனர்.காஞ்சிபுரம், சென்னை பகுதிகளில் இருந்து மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் படையெடுத்து வந்து அத்திவரதரை தரிசித்தனர். விடுமுறை நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் காஞ்சிபுரம் பக்தர்கள் வெள்ளத்தால் திணறியது. கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். நேற்று ஒரே நாளில் 5 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் திரண்டதால் நான்கு மாட வீதிகள், டி.கே. நம்பித்தெரு ஆகிய இடங்களில் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் சுமார் 10 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூட்டத்தால் காஞ்சிபுரம் திக்குமுக்காடி வரும் நிலையில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தவும் தேவையான ஏற்பாடுகளை போலீசார் செய்துள்ளனர். இதனால் கூட்டத்தை கட்டுப்படுத்த மட்டும் 11 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 4 போலீஸ் ஐ.ஜி.க்கள், 6 டி.ஐ.ஜி.க்கள், 30 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் பாதுகாப்பாக வீடு திரும்ப தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கோவிலுக்கு அருகே பக்தர்கள் கூட்ட நெரிசலை தடுக்கவும், முக்கிய பிரமுகர்கள் வரிசையில் கூட்டத்தை ஒழுங்குப்படுத்தவும் ஏற்பாடுகள் செய்துள்ளோம். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த 8 இடங்களில் பக்தர்களை நிறுத்தி அனுப்ப உள்ளோம். ஒவ்வொரு இடத்திலும் 10 ஆயிரம் பக்தர்கள் வரை நிறுத்தி அனுப்பப்படுவார்கள். அதே நேரம் பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் இலவசமாக வழங்கப்படும். கழிப்பிட வசதிகள், மருத்துவ வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. டாக்டர்கள் தயார் நிலையில் இருப்பார்கள். காத்து நிற்கும் பக்தர்கள் அத்திவரதரை தரிசிக்க வசதியாக எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு குடிநீர், சுகாதார வசதிகள் கழிவறை வசதி, மின்சார வசதி, இரவில் உறங்குவதற்கு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. டோனர் பாஸ் வைத்து உள்ளவர்கள் வரும் 15-ந்தேதி வரை அனுமதிக்கபடுவர். பொது தரிசனத்தில் வரும் பக்தர்கள் 16-ந்தேதி வரை அனுமதிக்கப்படுவர். பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்ய 16-ந்தேதி கடைசி நாள்.முன்னரே அறிவித்தபடி 17-ந்தேதி ஆகம விதிப்படி அத்தி வரத பெருமாள் சடங்கு சம்பிரதாயங்கள் செய்யப்பட்டு கோவிலில் உள்ள அனந்த சரஸ் குளத்தில் உள்ளே வைக்கப்படுவார். இந்நிலையில், காஞ்சீபுரம் அத்திவரதர் உற்சவத்தின் 45-வது நாளின் நள்ளிரவில் குடும்பத்துடன் ரஜினிகாந்த் தரிசித்தார்.நின்ற கோலத்தில் வசந்த மண்டபத்தில் வீற்றிருக்கும் அத்தி வரதரை நடிகர் ரஜினிகாந்த் தன் மனைவி லதாவுடன் நள்ளிரவில் தரிசனம் செய்தார். நேற்று இரவு சுமார் 12.30 மணி அளவில் நடிகர் ரஜினிகாந்த் அவரது குடும்பத்துடன் வந்து அத்திவரதரை தரிசித்திதார். இந்நிலையில் 45-வது நாளான இன்று அத்திவரதரை தரிசிக்க வந்த நெமிலிபானவரம் பகுதியை சேர்ந்த அசோக்குமார் என்பவரின் மனைவி விமலாவிற்கு திடீர் பிரசவ வலி ஏற்பட்டது. உடனே அவரை 16-ம் கால் மண்டப மருத்துவ முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு 3 கிலோ எடையுள்ள ஆண் குழந்தை சுக பிரசவத்தில் பிறந்தது. இப்போது அவர் மேல் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். தாயும் குழந்தையும் ஆரோக்கியமாக உள்ளதாக பிரசவம் பார்த்த செவிலியர்கள் ஜன ஸ்ரீ மற்றும் யோக வள்ளி கூறியுள்ளனர். To receive latest interesting videos and current news, just subscribe our All Round Media channel. We hope our channel will surely entertain you. If there are any copyright issues directly contact us [email protected]