Lyrics & Tune by : PR . Johnsam Joyson Lyrics இயேசு நல்லவர் இயேசு நல்லவர் அரவணைக்கும் ஆழமான அன்பு கொண்டவர் அனுதினம் கூட நின்று பாதுகாப்பவர் இயேசு நல்லவர் இயேசு நல்லவர் இயேசு என்றும் நல்லவர் 1. விழுகையின் விளிம்பில் நின்ற போதும் வீழ்ந்திடாமல் காத்த இயேசு நல்லவர் கால்கள் வழுவாமலே கண் இமை மூடாமலே பாதுகாத்த இயேசு என்றும் நல்லவர் 2. ஜீவனுள்ள நாட்களெல்லாம் நன்மை கிருபை தொடர செய்யும் இயேசு நல்லவர் மரண பள்ளத்தாக்கிலும் அழுகை பள்ளத்தாக்கிலும் கைவிடாத இயேசு என்றும் நல்லவர் 3. சத்துரு எதிர்த்து வந்தபோதும் சத்துவமாய் நின்ற இயேசு நல்லவர் சாம்பலை சிங்காரமாய் சாபத்தை சந்தோஷமாய் மாற்றி தந்த இயேசு என்றும் நல்லவர்