நான் கர்த்தர். நான் மாறாதவர். ஆகையால் யாக்கோபின் புத்திரராகிய நீங்கள் நிர்மூலமாகவில்லை.

நான் கர்த்தர். நான் மாறாதவர். ஆகையால் யாக்கோபின் புத்திரராகிய நீங்கள் நிர்மூலமாகவில்லை.

Praise the Lord, Good Morning கர்த்தர் நல்லவர், அவர் கிருபை என்றும் உள்ளது. நான் கர்த்தர். நான் மாறாதவர். ஆகையால் யாக்கோபின் புத்திரராகிய நீங்கள் நிர்மூலமாகவில்லை. மல்கியா 3:6 கர்த்தர் மாறாதவராக இருக்கிறபடியால் இஸ்ரவேலர் அழிந்து போகவில்லை ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு ஆகியவர்களிடம் கர்த்தர் செய்து கொண்ட உடன்படிக்கையை அவர் நிறைவேற்றுவதற்கு கவனமாக இருந்தபடியால் இஸ்ரவேலர் அழிந்து போகவில்லை. யாக்கோபின் வம்சத்தார், பஞ்சத்தின் காரணமாகவும் யோசேப்பு அழைத்ததாலும், எகிப்திற்கு சென்று அங்கேயே இருந்து விட்டார்கள். கர்த்தருடைய ஆசீர்வாதத்தால் அவர்கள் பலுகி பெருகி, எகிப்து தாங்க கூடாத அளவு பெருகி இருந்தார்கள். யோசேப்புக்கு பின்பு யோசேப்பை அறியாத ராஜா எகிப்தில் தோன்றி இஸ்ரவேலர்களை அடிமைப்படுத்தினான். இஸ்ரவேலர்கள் எகிப்தில் அடிமையாக இருந்தார்கள். அவர்களுடைய கூக்குரலும் விண்ணப்பமும் தேவனுடைய சமூகத்தில் எட்டியது. கர்த்தர் ஆபிரகாமோடு ஈசாக்கோடு யாக்கோபோடு செய்த உடன்படிக்கையை நினைவு கூர்ந்தார். கர்த்தர் மாறாதவராய் இருந்தபடியால் அவர் வாக்கு கொடுத்த கானான் தேசத்தை கொடுக்கும்படி அவருடைய வாக்குத்தத்தை மாற்றவில்லை. எனவே இஸ்ரவேலர்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து மீட்டு நடத்திக் கொண்டு போனார். எகிப்தில் இருந்து போன இஸ்ரவேல் ஜனங்கள் வழியில் கர்த்தருக்கு அருவருப்பான பிடிக்காத காரியங்களை செய்த போதும் கர்த்தர் மாறாதவராய் இருந்ததால் தாம் வாக்கு கொடுத்த படி அந்த தேசத்திற்கு கொண்டு செல்ல சித்தம் உள்ளவராய் இருந்தார். இஸ்ரவேல் ஜனங்கள் வணங்கா கழுத்துள்ள ஜனங்களா இருந்தபடியால், தங்களை வழி நடத்திச் சென்ற கர்த்தருக்கும், மோசேக்கும் ஆரோனுக்கும் கோபம் உண்டாக்கினார்கள். ஆனாலும் கர்த்தர் மாறவில்லை. இஸ்ரவேலர்கள் பகைவர்களின் கையில் சிக்கிய போதும், அவர்களின் உடமைகள் எல்லாம் கொள்ளையடிக்கப்பட்ட போதும், கர்த்தருடைய மாறாத கரம் அவர்களோடு கூட இருந்ததால் அவர்கள் எல்லாவற்றையும் மீட்டுக் கொண்டார்கள். தாவீதோடு கூடஇருந்த கர்த்தர், தாவீதை அபிஷேகம் பண்ணின கர்த்தர், தாவீது தவறு செய்த போதும், அவன் மனம் வருந்தி அழுது விண்ணப்பித்த போதும், அவனுடைய விண்ணப்பத்தை கேட்டு, தாவீதுக்கு மாறாத கர்த்தராக இருந்தார். அப்போஸ்தலனாகிய பவுல் ரோமாபுரியாருக்கு எழுதும் போது, தேவனுடைய கிருபைவரங்களும், அவர்களை அழைத்த அழைப்பும் மாறாதவைகளே என்று எழுதியுள்ளார். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் சீஷராகிய யாக்கோபு, கர்த்தரிடத்தில் யாதொரு மாறுதலும் அவரிடத்தில் யாதொரு வேற்றுமையும் இல்லை என்று சொல்கிறார். மல்கியா தீர்க்கதரிசி மூலமாக கர்த்தர் நமக்கு சொல்வது என்னவென்றால், நான் கர்த்தர். நான் மாறாதவர். ஆகையால் யாக்கோபின் புத்திரராகிய நீங்கள் நிர்மூலமாகவில்லை என்பதே. ஆம், கர்த்தர் மாறாதவராய் இருக்கிறபடியால் நாம் இன்றும் ஜீவனோடு இருக்கிறோம். கர்த்தரால் அழைக்கப்பட்ட தெரிந்து கொள்ள பட்டவர்களாக யாக்கோபின் புத்திரர்களாக நாம் இருப்பதால், நம்முடைய பாவங்களை மன்னித்து கர்த்தருக்கு விரோதமாக செய்த காரியங்களை கணக்கில் கொள்ளாமல், கர்த்தர் நமக்கு கொடுத்த கட்டளைகளையும் கற்பனைகளையும் வார்த்தைகளையும் வசனங்களையும் தீர்க்கதரிசனங்களையும் மீறி நடந்தபோதும், வணங்கா கழுத்துள்ள ஜனங்களாக நடந்து கொண்ட போதும், நாம் நிர்மூலம் ஆகாமல் இருப்பது கர்த்தர் மாறாதவராய் இருக்கிறபடியால் தான். கர்த்தர் நம்முடைய முன்னோர்களுக்கும் நமக்கும் கொடுத்த வாக்குத்தத்தத்தையும் வார்த்தைகளையும், அவருடைய சித்தத்தின்படி திட்டத்தின் படி நோக்கத்தின்படி நம்முடைய வாழ்க்கையில் நிறைவேற்றும்படியாக அவர் மாறாதவராய் இருந்து, நம்மை கைவிடாமல் ஆபத்துக் காலத்தில் நம்மை நினைவு கூர்ந்து, நம்முடைய கூப்பிடுதலின் சத்தத்திற்கு பதில் கொடுத்து, ஆசீர்வாதமாக நடத்தி வருகிறார். நம் தேவனாகிய கர்த்தர் நம்மிடத்தில் மாறாதவராய் இருக்கிறபடியால், அவரால் தெரிந்து கொள்ளப்பட்ட அவருடைய பிள்ளைகளாகிய நாமும் அவருடைய வழிகளில் இருந்து மாறாது, அவருடைய அன்பிலிருந்து மாறாது, அவரோடு கூட நிலைத்திருந்து ஆசிர்வாதமான கிருபையின் ஈவுகளை பெற்று சுகமாய் சமாதானமாய் சந்தோசமாய் வாழ்வோம் ஆமென். சர்வ வல்லமை உள்ள சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, நீர் எங்களுடைய வாழ்க்கையிலும் மாறாதவராய் இருக்கிறபடியால் நாங்கள் இதுவரை நிர்மூலமாகாமல் வாழ்வது உம்முடைய கிருபையே. கர்த்தாவே, நீர் எங்கள் மேல் வைத்த அன்பில் மாறாதவராய் இருக்கிறது போல நாங்களும் உம்முடைய அன்பில் மாறாதவர்களாய் வாழக்கூடிய கிருபைகளை கர்த்தர் எங்களுக்கு தரும்படியாய் நாங்கள் ஜெபிக்கிறோம். கர்த்தாவே இந்த நாளை நீர் எங்களுக்கு கொடுத்ததற்கு நன்றி. இந்த நாளிலும் பிறந்தநாள் மற்றும் திருமணநாள் காண்கின்ற யாவருடைய வாழ்க்கையிலும் எங்கள் தேவனாகிய கர்த்தர் என்றும் மாறாதவராய் அவர்களோடு கூட இருந்து அவர்களை ஆசீர்வதிக்க வேண்டும் என அவர்களுக்காக நாங்கள் ஜெபித்து வாழ்த்தி ஆசீர்வதிக்கிறோம் நல்ல பிதாவே ஆமென் ஆமென் கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் முழுவதும் நம்மோடு கூட இருப்பதாக ஆமென் #Kartharnallavar #Morningdevotion #Tamil #Shotmessage #Kartharnallavar #God is Good #Morningdevotion #TamilMessage #Shortmessage #GoodMorning #Praise the Lord #Gospel #Gospel message #Hope #Word #Godsword #Today Message #Today Word #Bible word #Hope word #Blessing word #Blessing way #Good way #Successway #Successword #Godisgood #kartharnallavar #gospel #hope #today #blessing #morningdevotion #bible #god #godisgood