திருச்சிற்றம்பலம் இறைவன் பெயர் வாலீஸ்வரர், கொய்யாமலைநாதர் இறைவி பெயர் இறையார் வளையம்மை காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் காஞ்சீபுரத்திலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் இந்த சிவஸ்தலம் அமைந்துள்ளது. காஞ்சீபுரத்திலிருந்து பயணம் செய்யும் போது பாலாற்றைக் கடந்தால் சுமார் 8 கி.மீ. தொலைவில் தூசி என்ற கிராமம் வரும். அங்கிருந்து பிரியும் குரங்கணில்முட்டம் பாதையில் 2 கி.மீ. சென்றால் கிராமத்தின் எல்லையில் பாலாற்றின் கரைக்கு அருகில் ஆலயம் அமைந்துள்ளது காக வடிவில் இருந்த எமதர்மன், தீர்த்தம் உண்டாக்கினார். இந்த தீர்த்தம் பிறைச்சந்திர வடிவில் கோயிலின் மூன்று புறங்களிலும் சூழ்ந்திருக்க, நடுவில் சிறிய பாறையின் மீது சிவன் வீற்றிருக்கிறார். வாலி குரங்கு வடிவிலும், இந்திரன் அணில் வடிவிலும், எமதர்மன் முட்டம் எனும் காகம் வடிவிலும் வந்து வணங்கி வழிபட்டு முற்பிறவி வினை தீர்ந்து பேறு பெற்ற தலமாக வாலீஸ்வரர் திருத்தலமாக விளங்கி வருகிறது இக்கோயிலுக்கு தரிசிக்க வந்தால் வடக்கே சுமார் அரை கி.மி. தொலைவில் பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் காலத்திய குடைவரைக் கோவிலை ரசிக்கலாம் கோயில் நடை திறப்பு: 07.00-12.00 மாலை: 5.00- 8.00 https://goo.gl/maps/Lstv1JpQC9fpEucW6 இதுவரை நான் கண்ட திருத்தலங்களின் சிறப்புகள், மகான்கள் மற்றும் இறையடியார்களின் பெருமைகள், இறைப்புராணங்களுடன் திருமுறைகள், திருப்புகழ் மற்றும் பல ஆன்மிக நூல்களிலிருந்தும் இறையருளால் யாமறிந்ததை, யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் எனும் வாக்கிற்கிணங்க உங்களுடன் பகிர்ந்துகொள்ள இருக்கிறேன். அத்துடன் ஆன்மிகம் தொடர்பான உங்களது சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கும் இயன்ற அளவு இறையருளால் விடையளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளை கீழே தந்துள்ள எனது வாட்சப் எண்ணிலோ அல்லது வீடியோவின் கமெண்ட்டிலோ கேட்கலாம். அன்புடன் சிவ.ஜவஹர் ☎️ 9551623296 #சிவ_ஜவஹர் #Siva_Jawahar இறையடியார்கள் தங்களின் மேலான ஆலோசனைகளை வழங்கி இச்சேனலை ஆதரிக்கவேண்டுகிறேன்.