பொதிகை இரவு 7.00 மணி செய்திகள் [07.01.2021] #PodhigaiTamilNews #பொதிகைசெய்திகள்

பொதிகை இரவு 7.00 மணி செய்திகள் [07.01.2021] #PodhigaiTamilNews #பொதிகைசெய்திகள்

1) இந்தியாவின் கிழக்கு மேற்குப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சரக்கு ரயில் பாதைகள் நாட்டின் வளர்ச்சியில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும் - பிரதமர் நரேந்திர மோதி நம்பிக்கை. 2) அமெரிக்க நாடாளுமன்றம் அருகே ட்ரம்ப் ஆதரவாளர்கள் நடத்திய போராட்டத்தால் ஏற்பட்ட மோதல்களில் நான்கு பேர் பலி - பரபரப்புக்கு மத்தியில் அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு. 3) அமெரிக்காவில் நடைபெறும் வன்முறைச் சம்பவங்கள் வேதனை அளிப்பதாக உள்ளதாக பிரதமர் நரேந்திர மோதி கருத்து - சட்ட விரோத போராட்டங்கள் மூலம் ஜனநாயகத்தை தகர்க்க அனுமதிக்க முடியாது என்றும் வலியுறுத்தல். 4) கடைக்கோடியில் வசிக்கும் மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்வதே அரசின் கடமை - அமைச்சர் ஹர்ஷ்வர்தன் திட்டவட்டம். 5) விவசாயிகளுடன் நாளை மத்திய அரசு நடத்தவுள்ள பேச்சுவார்த்தையில் தீர்வு காணப்படும் - மத்திய வேளாண் இணையமைச்சர் கைலாஷ் செளத்ரி. 6) தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏற்பாடுகள் - மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு. 7) இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - முதல் நாள் ஆட்ட நேர இறுதியில் ஆஸ்திரேலியா 2 விக்கெட் இழப்பிற்கு 166 ரன். INSTAGRAM :   / ddpodhigainews   FACEBOOK :   / ddpodhigainews   TWITTER :   / tamilnews-doordarshan@ddnewschennai   YOUTUBE : http://youtube.com/TamilNews/Doordars...