இட்லி தோசைக்கு பருப்பு இல்லாத உடனடி சாம்பார் | Tiffin Sambar in Tamil | idli sambar in tamil | Sambar | Tomato Sambar | Instant Sambar for Idli Dosa | Tiffin Sambar Recipe | இட்லி தோசைக்கு இந்த சூப்பரான தக்காளி சாம்பார் செஞ்சு பாருங்க இனி அடிக்கடி செய்வீங்க --------------------------------------------------------------------------------------------------- Click Here to Subscribe : https://youtube.com/channel/UC3WOGwvR... ------------------------------------------------------------------------------------------------------- Popular Recipes : பாய் வீட்டு மட்டன் பிரியாணி • பாய் வீட்டு மட்டன் பிரியாணி/Mutton biryani... கோதுமை மாவில் ஈஸியாக மொறுமொறு முறுக்கு செய்யலாம் • கோதுமை மாவில் ஈஸியாக மொறு மொறு முறுக்கு ச... கொண்டைக்கடலை வாழைப்பூ வடை • கொண்டைக்கடலை வாழைப்பூ வடை பால்கோவா செய்வது எப்படி | How to make Palkova • பால்கோவா செய்வது எப்படி | How to make Palk... காஜூ கட்லி செய்வது எப்படி | Kaju Katli Recipe • காஜூ கட்லி செய்வது எப்படி | Kaju Katli Re... ------------------------------------------------------------------------------------------------ Be sure to subscribe to our channel and share it with your friends and family ! Happy cooking. ------------------------------------------------------------------------------------------------ இட்லி தோசைக்கு தினமும் சட்னி அரைத்து சலித்துப் போனவர்கள் புதிதாக சாம்பார் செய்து பார்க்க ஆவலுடன் இருப்பார்கள். ஆனால் சாம்பார் வைப்பது மிகவும் கடினமான காரியமாக நினைத்து விட்டுவிடுவது உண்டு. மிக மிக எளிதாக பத்தே நிமிடத்தில் வெறும் தக்காளி, பச்சை மிளகாயை வைத்து சுலபமாக சூப்பரான அட்டகாசமான சுவையில் சாம்பாரை செய்து விடலாம். அதை எப்படி செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள். பருப்பு இல்லாத இட்லி சாம்பார் செய்ய தேவையான பொருட்கள்: தக்காளி - 2 பெரிய வெங்காயம் - 1 காய்ந்த மிளகாய் - காரத்துக்கேற்ப பூண்டு - 2பல் சாம்பார் பொடி - 1 டேபிள் ஸ்பூன் சீரகம் - 1 டேபிள் ஸ்பூன் கறிப்பிலை - தாளிப்பதற்கு கடுகு உளுத்தம் பருப்பு - தாளிப்பதற்கு எண்ணெய் - தாளிப்பதற்கு பச்சை மிளகாய் – - காரத்துக்கேற்ப பெருங்காயத்தூள் - அரை டேபிள் ஸ்பூன் கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன் மல்லித்தழை - சிறிதளவு வெந்தயம் - அரை டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு அடுப்பை பற்ற வைத்து ஒரு குக்கரை அடுப்பில் வைத்து கொள்ளுங்கள். குக்கரில் இரண்டு முழு தக்காளி,ஒரு நறுக்கிய பெரிய வெங்காயம் , இரண்டு பல் பூண்டு , இரண்டு பச்சை மிளகாய் , சாம்பர் பொடி,உப்பு மற்றும் தேவையானளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி வைத்து விடவும். ஒரு மூன்று விசில் வரை விட்டு பிரஷர் குறைந்ததும் திறந்து பார்க்கலாம். தண்ணீர் முழுவதையும் வடித்து எடுத்துக் கொண்டு மீதமுள்ள தக்காளி மற்றும் பச்சை மிளகாய் கலவையை ஆறியதும் மிக்ஸி ஜாரில் போட்டு பேஸ்ட்டாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் முழு கொத்தமல்லி, காய்ந்த மிளகாய் , சீரகம் , மற்றும் வெந்தயம் சேர்த்து நன்கு வாசனை வரும் வரை சிவக்க வறுத்து மிக்ஸியில் பொடியாக அரைத்து தனியாக வைத்து கொள்ளவும் கடாயில் எண்ணெய் சூடானதும் முதலில் கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் சீரகம் சேர்த்து வெடிக்க விடவும். அதன் பின் நறுக்கிய சின்ன வெங்காயம், கருவேப்பிலை,காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதும், வடித்து வைத்துள்ள தண்ணீரை சேர்த்து நன்கு கொதிக்க விடவும். பின்னர் கடலை மாவில் சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து ஊற்றி, வறுத்த வைத்துள்ள பொடி ஒரு ஸ்பூன் சேர்த்து கலக்கி விட்டு இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி தழைகளை சேர்த்து கீழே இறக்கி வைக்கவும். அவ்வளவுதாங்க சூப்பரான சுவையாக இருக்கும் வெறும் தக்காளி சாம்பார் இப்போது தயார் ஆகிவிட்டது. பருப்பு சேர்க்காமல் காய்கறிகள் எதுவும் இல்லாத சமயத்தில் உடனடியாக செய்யக்கூடிய அட்டகாசமான சாம்பார் இந்த தக்காளி சாம்பார். Tiffin Sambar Recipe in Tamil | Hotel Sambar Recipe | Idli Sambar Recipe | Sambar for Idli, Dosa இந்த மாதிரி சாம்பார் வெச்சா இட்லிய தொட்டு சாப்பிட பிடிக்காது - SAMBAR RECIPE - TIFFIN SAMBAR Tiffin Sambar | Breakfast Sambar இட்லி சாம்பார் | idli sambar tamil | idli sambar recipe in tamil | sambar | idli sambar in tamil இட்லி தோசைக்கு இந்த சூப்பரான தக்காளி சாம்பார் செஞ்சு பாருங்க இனி அடிக்கடி செய்வீங்க||Tomato Sambar உடனடி இட்லி தோசை சாம்பார் | sambar without vegetables | sambar recipe in tamil பருப்பு இல்லாத சாம்பார் இட்லி தோசைக்கு செய்வது எப்படி | SAMBAR இட்லி தோசைக்கு இந்த ஹோட்டல் சாம்பார் செய்து பாருங்க | Hotel Sambar in Tamil | Tiffin Centre Sambar #sambar #tiffinsambar #AymaasKitchen