இந்த சேனலை subscribe செய்து தங்கள் பெயர், மற்றும் நட்சத்திரத்தை comment-ல் பதிவு செய்யும் பக்தர்களுக்கு பிரதோஷ நாளில் 108 முறை மஹா மிருத்யுஞ்சய ஜெபம் செய்து அவர்கள் உடல் நலம் பெறவும், நற் செயல்கள் செய்து நீண்ட ஆயுளை பெறவும் பிரார்த்தனை செய்யப்படும். Devotees who subscribe to this channel and comment their name with birthstar will be prayed 108 times a day on Pradosa to pray for their health, good deeds and longevity. இந்த மஹா மிருத்யுஞ்ஜய மந்திரம் (Maha Mrityunjaya Mantra) பிரம்மிருஷி வஷிஷ்ட மைத்ரவரூணி வழங்கிய ரிக் வேதத்தின் 7 வது மண்டலத்திலிருந்து வந்தது. நோய் தாக்கியவர்கள் மற்றும் உடல் நலன் குறைபாடுகளில் உள்ளவர்கள் இந்த மந்திரத்தை தொடர்ந்து தினமும் சொல்லி வந்தால் விரைவில் நோய் குணமாகும் என்பது நம்பிக்கை. ரிக் வேதத்திலும், யஜூர் வேதத்திலும் குறிப்பிடப்பட்டுள்ள இந்த மகா மிருத்யுஞ்ஜய மந்திரத்தை தினமும் 108 முறை ஜெபிப்பதன் மூலம் மரண பயம் நீங்கும், ஆயுள் அதிகரிக்கும், இறை வழிபாட்டில் நாட்டம் ஏற்படும், தீராத நோய் தீரும் என்ற நம்பிக்கை உள்ளது… ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம் உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத் இயக்கையாகவே நறுமணம் கொண்டவரும், அடியவர்களுக்கு கருணையை ஊட்டி வளர்பவருமான முக்கண் கொண்ட எம் பெருமானே உங்களை பூஜித்து வழிபடுகிறோம். காம்பில் இருந்து வெள்ளரிப்பழம் எப்படி விடுபடுகிறதோ அது போல மரணத்தின் பிடியில் இருந்து என்னை விடுவித்து சன்மார்க்க நெறியில் இருந்து பிறழாமல் வாழ்ந்திட அருள்பாலிக்க வேண்டுகிறேன். #மஹாமிருத்யுஞ்சயமந்திரம் #MahaMrityunjayaMantra #த்ரயம்பகம் #Tryambakam #Hinduthva