எமனேஸ்வரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை திருக்கல்யாண உற்சவம்.. 🙏❤️

எமனேஸ்வரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை திருக்கல்யாண உற்சவம்.. 🙏❤️

இதோ எங்கள் வரதன் புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை #திருக்கல்யாண_உற்சவம்.. 🙏❤️ கல்யாணம் காணவே வாருங்கள்.. நம் தேவாதிராஜனின்.. கல்யாணம் காணவே வாருங்கள்.. ஸ்ரீ பெருந்தேவி கல்யாணம் காணவே வாருங்கள்.. ஆண்டாள் பெருமாளுடன் தனது கல்யாணக் காட்சியை தன் தோழிக்கு எடுத்துரைப்பதை “வாரணம் ஆயிரம்” பாசுரத்தில் கேட்டுருப்போம்.. அதை நேரிலே நமக்குக் காண்பிக்கிறான் நம் வரதன்.. எப்படி என்று பார்ப்போமா.. சூரிய பகவான் , தன் பெண்ணான சூர்யாவை சோமனுக்கு (சந்திரனுக்கு) திருமணம் செய்து கொடுத்த போது கூறிய மந்திரங்கள், நடந்த சடங்குகள், ரிக் வேதத்தில் உள்ளன. சில மந்திரங்கள், யஜுர் வேதத்தில் உள்ளன. நம் வரதனுக்கு நடந்த கல்யாணமும், இதையே பின்பற்றி நடந்தது! வாரணம் ஆயிரம் சூழ கோவிலெங்கும் தோரணம் கட்டி, பூரண கும்பங்களுடன் வரதன் எதிரே வந்து, அவனை வரவேற்றனர்! திருமண நாள் என்பதால், பாக்கு மரங்களை உடைய அலங்காரங்கள் நிறைந்த பந்தலின் உள்ளே, மிடுக்கு உடைய நரசிம்மன் என்றும் மாதவன் என்றும் கோவிந்தன் என்றும் பெயருடைய ஒரு காளை நுழைவதைப் போல் நம் வரதன் கல்யாண மண்டபத்தில் எழுந்தருளுகிறார். பின்னர் ஸ்ரீ பெருந்தேவியுடன் மேள தாள வாத்தியத்துடன் நடனம் ஆடிக் கொண்டே மாலை மாற்றிக் கொள்கிறார்.. பின்னர் நல்ல நேரத்தில் - மத்தளமும் நாதஸ்வரமும் சேர்ந்து இசைக்க (மத்தளம் கொட்ட), நல்ல பெரிய வெள்ளை வலம்புரிச் சங்குகள் சப்திக்க (வரிசங்கம் நின்றூத), அர்ச்சகர் மந்திரம் சொல்ல – வரதராஜன் பெருந்தேவிக்கு தாலி கட்டினான்! பின்னர், பெருமாள் தாயார் சடாரிகளைக் கொண்டு தீவலம், அம்மி மிதித்தல் நடைபெற்றது.. பின்னர் அலங்கரிக்கபட்ட மேடையில் நலங்கு எனப்படும் தேங்காய் உருட்டி பெருமாள் தாயார் சேவை சாதித்தனர்.. இதோ நம் வரதன் பெருந்தேவியுடன் திருக்கல்யாண கோலத்தில் நமக்குக் காட்சி அளிக்கிறார்.. அவரிடம் வேண்டிக் கொள்வோம்.. 🙏